துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை ஆட்டக்காரர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடதுதிருப்பம் | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1], 4 பிப்ரவரி 2006 |
திருமலை ஈச்சம்பாடி சீனிவாசன் (பரவலாக டி. ஈ. சீனிவாசன் அக்டோபர் 26, 1950 – திசம்பர் 6, 2010) தமிழ்நாட்டைச் சேர்ந்த 1980-1981 காலத்தில் தேது மற்றும் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கேற்ற முன்னாள் இந்திய துடுப்பாட்ட வீரர். சீனிவாசன் சென்னையில் பிறந்தவர். 1977-78 பருவத்தில் துலீப் கோப்பை பந்தயமொன்றில் தென்பிராந்தியத்திற்காக 112 ஓட்டங்கள் எடுத்தபோது தேர்வாளர்களின் கவனத்தைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து 1980-81 தியோதர் கோப்பை இறுதி ஆட்டத்தில் 129 ஓட்டங்கள் எடுத்தும் இரானி கோப்பை பந்தயதில் தில்லிக்கு எதிராக ஆட்டமிழக்காது சதம் அடித்தும் தமது சீரான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். இதனால் ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து பந்தயத் தொடருக்கு தெரிந்தெடுக்கப்பட்டார். ஆயினும் அப்பந்தயத் தொடரில் அவர் ஆடிய இரு ஒருநாள் போட்டிகளிலும் அவரால் ஓர் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை; ஆக்லாந்தில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான தேர்வுப் போட்டியிலும் 48 ஓட்டங்களே எடுத்தார்.
தமது அறுபதாவது வயதில் மூளைப் புற்றுநோயால் ஆறு திசம்பர் 2010 அன்று சென்னையில் மரணமடைந்தார். [1]