திருவனந்தபுரம் சென்ட்ரல்
തിരുവനന്തപുരം സെൻട്രൽ
இந்திய இரயில்வே நிலையம் | |
---|---|
திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலைய மையக் கட்டிடம் | |
அமைவிடம் | |
ஆள்கூறு | 8.4874°N 76.952°E |
வீதி | தம்பன்னூர் |
நகரம் | திருவனந்தபுரம் |
மாவட்டம் | திருவனந்தபுரம் |
மாநிலம் | கேரளா |
ஏற்றம் | MSL + 16 ft |
நிலையத் தகவல்கள் & வசதிகள் | |
நிலையம் வகை | மத்திய நிலையம் |
அமைப்பு | தரைத்தளம் |
நிலையம் நிலை | பயன்பாட்டில் உள்ளது |
வேறு பெயர்(கள்) | திருவனந்தபுரம் சென்ட்ரல் |
வாகன நிறுத்தும் வசதி | உள்ளது |
நுழைவாயில்கள் | 2 |
Connections | பேருந்து நிலையம், டாக்சி நிறுத்தம் |
இயக்கம் | |
குறியீடு | TVC |
கோட்டம் | திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம் |
மண்டலம் | தென்னக இரயில்வே (இந்தியா) |
தொடருந்து தடங்கள் | 24 |
நடைமேடை | 12 |
வரலாறு | |
திறக்கப்பட்ட நாள் | 4 நவம்பர் 1931 |
மின்சாரமயமாக்கல் | 30 திசம்பர் 2005 |
திருவனந்தபுரம் சென்ட்ரல் கேரள மாநிலத்தின் பெரியதும் போக்குவரத்து மிகுந்ததுமான ஒரு இரயில் நிலையமாகும். மேலும் தென்னிந்தியாவின் முக்கியமான இரயில் நிலையமும் ஆகும். இந்த இரயில் நிலையக் கட்டிடம் நகரின் முக்கியமான கட்டிடங்களுள் ஒன்று. இது சிறீ சித்திரைத் திருநாள் மகாராசாவினால் 1931-இல் கட்டப்பட்டது. இது செங்கற்களால் அல்லாமல் முற்றிலும் கருங்கற்களாலேயே கட்டப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு வரை செல்லும் நீண்ட இரயில் பாதையில் திருவனந்தபுரமே முதலில் வரும் பெரிய இரயில் நிலையம். இங்கு தினமும் 2,00,000 பயணிகள் வரை வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தில் கீழ்க்காணும் வசதிகள் உண்டு.[1]