திருவாரூர் பக்தவத்சலம் (பி. நவம்பர் 25)[1] தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் [2] ஆவார்.
பக்தவத்சலம் ஆரம்பகால இசைப் பயிற்சியினை தனது மாமா திருவாரூர் டி. ஆர். கிருஷ்ணமூர்த்தியிடம் பெற்றார். தொடர்ந்து தனது தாயார் டி. ஆர். ஆனந்தவல்லியிடம் இசையினைக் கற்றார்.
மதுரை சோமு, எம். எல். வசந்தகுமாரி, மகாராஜபுரம் சந்தானம், கே. வீ. நாராயணசுவாமி, மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா போன்ற புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்திருக்கிறார். டி. வி. சங்கரநாராயணன், கே. ஜே. யேசுதாஸ் ஆகியோருக்கு பக்க வாத்தியமாக மிருதங்கம் வாசித்து வருகிறார்.
பக்தவத்சலம் குறித்து தி இந்து நாளிதழில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை