தேவாரம் பாடல் பெற்ற திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் திருக்கோயில் திருவொற்றியூர் படம்பக்க நாதர் திருக்கோயில் | |
---|---|
![]() | |
ஆதிபுரீசுவரர் திருக்கோயில், திருவொற்றியூர் | |
புவியியல் ஆள்கூற்று: | 13°09′40″N 80°17′57″E / 13.160980°N 80.299065°E |
பெயர் | |
பெயர்: | திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் திருக்கோயில் திருவொற்றியூர் படம்பக்க நாதர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவொற்றியூர் |
மாவட்டம்: | சென்னை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | படம்பக்கநாதர் (ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்) |
தாயார்: | வடிவுடையாம்பிகை (திரிபுரசுந்தரி அம்மன்),வட்டப்பாறையம்மன் |
தல விருட்சம்: | மகிழம், அத்தி |
தீர்த்தம்: | பிரம்ம, நந்தி தீர்த்தம் |
ஆகமம்: | காரணம், காமீகம் |
சிறப்பு திருவிழாக்கள்: | கார்த்திகை பௌர்ணமி |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் |
வரலாறு | |
அமைத்தவர்: | பல்லவர், இராசேந்திர சோழன் |
ஆதிபுரீசுவரர் கோயில் தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூரில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஆதிபுரீசுவர்; தாயார் திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக அத்தி மரமும், மகிழ மரமும் உள்ளன. தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும், ஆதிசேட தீர்த்தமும் அமைந்துள்ளன. இத்திருத்தலத்திலுள்ள இறைவன் ஆதிபுரீஸ்வரர், தியாகராஜர், திருவொற்றீஸ்வரர் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறார். எனினும், ஆதிபுரீஸ்வரர் எனும் தியாகராஜர் ஒரு சன்னிதியிலும், திருவொற்றீஸ்வரர் தனியாக ஒரு சன்னிதியிலும் காட்சி தருகிறார்கள். காளியின் வடிவாக உள்ள வட்டப்பாறை அம்மன் இங்கே அருள் பாலிக்கிறார்.[1] பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[2]
பிரளயம் வேண்டாத பிரம்ம தேவர் சிவபெருமானிடம் தன்னுடைய கோரிக்கையை வைக்க யாகம் செய்தார். அந்த யாகத்தின் பலனால் சிவபெருமான் தோன்றி பிரளயத்தினை நிகழ்த்தாமல் தடுத்தார்.
இதனால் இத்தலம் பிரளயத்தினை ஒற்றச் செய்தல் (விலகச் செய்தல்) எனும் பொருளில் திருவொற்றியூர் என்று அழைக்கப்படுகிறது.
கம்பர் பகலில் வால்மீகி இராமாயணத்தைக் கேட்டு, இரவில் எழுதினார் என்பது வரலாறு. அவ்வாறு இரவில் எழுதும்போது இங்குள்ள வட்டப்பாறையம்மனைப் பார்த்து,
ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே!
நந்தாது எழுதுதற்கு நல்லிரவில்
பிந்தாமல் பந்தம் பிடி!
என்று வேண்ட, அவ்வாறே காளியன்னையும் பந்தம் பிடித்து, கம்பர் ராமாயணம் எழுத உதவினார்.[3]
சென்னை சிவப்பதிகள் 333 - சிவ த வெங்கடேசன்
திருவொற்றியூர் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருக்காளத்தி |
தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம் | அடுத்த திருத்தலம் திருவலிதாயம் |
|
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தல எண்: 20 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 252 |