திரேசி சுலாத்தியர்(Tracy Slatyer) கோட்பாட்டு வானியலில் கவனம் குவிக்கும் ஒரு துகல் இயற்பியலாளர் ஆவார்.[1][2] இவர் 2014 இல் காம்மாக் கதிர்வழி பெர்மி குமிழிகலைக் கண்டுபிடித்தமைக்காக உரோசி பரிசைப் பெற்றார். இது நம் பால்வெளியில்ஈதுவரை எதிர்பார்க்காத பேரியல் கட்டமைப்பு ஆகும்.[3][4][5]
இவரது ஆய்வு பால்வழி மையத்தில் அமைந்த கரும்பொருண்மம், காம்மாக் கதிர் உருத்தோற்றம் பற்ரிய விளக்கங்களின் தேட்டத்திலும் கவனம் குவிக்கிறது.[6]
இவர் ஆத்திரேலியா, காபெராவில் உள்ள நரபுந்தா கல்லூரியில் படித்தார்.[7] சுலாத்தியர் 2010 இல் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[3]