திரையோபாலனோப்சு பெக்காரி (Dryobalanops beccarii)[1] அல்லது கபூர் கெலாடன் Kapur (Keladan)திதெடெரோகார்பேசியே குடும்பத்தில் உள்ள ஒரு வகை தாவரமாகும்.[2] ஒடோர்டோ பெக்காரி, 1843-1920, இத்தாலிய ஆய்வாளர் மற்றும் தாவரவியலாளரின் நினைவாக இந்த இனம் பெயரிடப்பட்டது. இது மலேசியத்தீவகத்திலும்போர்னியோவிலும் காணப்படுகிறது. இது 65 மீ உயரம் வரையிலான ஒரு பெரிய மரமாகும், இது மணற்கல், மாக்கல் இரண்டிலும் ஆழமற்ற கசிவு மண்ணில் கலப்பு தித்ர்டெரோகார்ப் காடுகளில் காணப்படுகிறது.[3] இது கபூர் என்ற வணிகப் பெயர்களில் விற்கப்படும் கனமான மரமாகும். இது குறைந்தது நான்கு பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பாகோ, குனுங் முலு, குரோக்கர் ரேஞ்ச்உலு தெம்புராங் தேசிய பூங்காக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.