திரௌபதி கிமிரே (Draupadi Ghimiray) இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலராவார். இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருது இவருக்கு 2011ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.[1]
தொழில் ரீதியாக கிமிரே ஒரு செவிலியராவார். உடல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு உதவுவதற்கும் அவர்களுக்கு விரிவான சேவையை வழங்குவதற்கும் கிமிரே 1999 ஆம் ஆண்டு இத்தொழிலை எடுத்துக் கொண்டார். சிக்கிமில் ஊனமுற்றோரின் நலனுக்காக கிமாரே சிக்கிம் விக்லாங் சகாயதா சமிதி என்ற அமைப்பை நிறுவினார். இன்று, இவரும் இவரது தன்னார்வ தொண்டு நிறுவனமான சிக்கிம் விக்லாங் சகாயதா சமிதியும் இப்பகுதி மக்களிடையே அவர்கள் வீட்டுப் பெயராக மாறிவிட்டது.[2]
செயற்கை கால்கள், கைகள் பொருத்தப்பட்ட குழந்தைகளுக்கும், அன்னம் பிளவுக்கு சிகிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கான இலவச அறுவை சிகிச்சைக்கும் கிமிரே பெரிதும் உதவினார்.