திறந்த இணையம் முனைப்பு

திறந்த இணையம் முனைப்பு (The OpenNet Initiative) என்பது இணையத்தில் தணிக்கையை வடிகட்டலை கண்காணிக்கும், ஆவணப்படுத்தும் ஒர் அமைப்பாகும். பல்வேறு நாடுகளில் இணையம் எந்த அளவு தணிக்கை செய்யப்படுகிறது, தணிக்கைக்கைக்கான சட்ட அரசியல் வடிவங்கள், செயற்படுத்தும் அரச அலகுகள் பற்றி இந்த அமைப்பு அறிக்கைகள் வெளியிடுகிறது. இதில் பல பல்கலைக்கழக ஆய்வு மையங்கள் பங்கெடுக்கின்றன.