திலீப் குமார் கங்குலி D. K. Ganguly | |
---|---|
பிறப்பு | சனவரி 4, 1940 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை |
|
பணியிடங்கள் | |
அறியப்படுவது | Studies on Parkinsonism |
விருதுகள் |
திலீப் குமார் கங்குலி (Dilip Kumar Ganguly) இந்தியாவைச் சேர்ந்த ஒரு நரம்பியல் மற்றும் நரம்பியல் மருந்தியல் நிபுணர் ஆவார். [1] மருந்தியல் மற்றும் பரிசோதனை சிகிச்சைத் துறையின் தலைவராக இருந்தார். இந்திய இரசாயன உயிரியல் நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார். [2] இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவில் 4 ஜனவரி 1940 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பார்கின்சோனிசம் [3] மற்றும் இந்தியாவில் நரம்பியல் மருந்தியல் ஆய்வுகளை ஊக்குவிப்பதில் இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக நன்கு அறியப்பட்டார். [4] இவரது ஆராய்ச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகைகளில் பல கட்டுரைகளின் வழியாக இந்த ஆவணங்கள் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். [5] [6] தவிர, இவர் பிறரால் வெளியிடப்பட்ட புத்தகங்களுக்கும் சில அத்தியாயங்களை பங்களித்துள்ளார் [7] இவரது பணிகள் பல ஆராய்ச்சியாளர்களாலும் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது. இந்திய நரம்பியல் அகாடமியின் நிறுவனரான திலீப் குமார் கங்குலி அதன் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். [8] அறிவியல் ஆராய்ச்சிக்கான இந்திய அரசாங்கத்தின் உச்ச நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் , மருத்துவ அறிவியலுக்கான இவரது பங்களிப்புகளுக்காக மிக உயர்ந்த இந்திய அறிவியல் விருதுகளில் ஒன்றான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசை 1985 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கியது [9]