தில்பாக் சிங் அத்வல் Dilbagh Singh Athwal | |
---|---|
பிறப்பு | India | 12 அக்டோபர் 1928
இறப்பு | 14 மே 2017 | (அகவை 88)
பணி | தாவர இனப்பெருக்குனர் விவசாயி மரபியலாளர் |
அறியப்படுவது | கோதுமை மற்றும் அரிசியின் புதிய வகைகள் |
விருதுகள் | பத்ம பூசண் சாந்தி சுவரூப் பட்நாகர் விருது[1] |
தில்பாக் சிங் அத்வால் (Dilbagh Singh Athwal) மரபியலாளர், தாவர இனப்பெருக்குனர், விவசாயி என பன்முகங்களுடன் இயங்கிய ஓர் இந்திய அறிவியலாளர் ஆவார். 1928 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதியான்று இவர் பிறந்தார். தாவர இனப்பெருக்கத்தில் முன்னோடி ஆராய்ச்சி நடத்தியதாக அறியப்படுகிறார். [2] பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், தாவர இனப்பெருக்கத் துறையின் தலைவராகவும், புகழ்பெற்ற உயிரியலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான நார்மன் போர்லாக்கின் நண்பராகவும் விளங்கினார்.[3] நார்மன் போர்லாக்குடன் இணைந்து அதிக விளைச்சல் தரும் குள்ள வகை கோதுமை அறிமுகத்திற்கு ஒத்துழைத்தார். .
கோதுமை புரட்சியின் தந்தை என்று பிரபலமாக அறியப்பட்ட இவர், 1966 ஆம் ஆண்டு 'பிவி 18' வகை கோதுமை வளர்ப்பில் முக்கியாப்பங்கு வகித்தார். 1967 ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமான அம்பர் தானிய கோதுமை வகையான 'கல்யாண்சோனா'வை வளர்ப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார். [1] இதே ஆண்டில் தில்பாக்கு சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். நிர்வாக குழு மற்றும் நிறுவனத்தின் முதல் துணை பொது இயக்குநர் பதவிகளில் பணியாற்றினார். [4] [5] இவரது ஆராய்ச்சி நெல் வளர்ப்பில் பல புதுமைகளைத் திருப்பித் தந்துள்ளது மேலும் இவரது பணி அமைப்பு பல புத்தகங்கள் மற்றும் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட கட்டுரைகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சிட்னி பல்கலைக்கழகம் வேளாண்மைக்கான இவரது பங்களிப்பிற்காக 1955 ஆம் ஆண்டில் இவருக்கு தத்துவ முனைவர் பட்டம் வழங்கியது [6] 1964 ஆம் ஆண்டில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றத்தின் சாந்தி சுவரூப் பட்னாகர் பரிசை தில்பாக்கு பெற்றார். [7] இந்திய அரசு இவருக்கு மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருதினை உயிரியல் அறிவியலுக்கான பங்களிப்புக்காக 1975 ஆம் ஆண்டில் வழங்கி சிறப்பித்தது. [8]
தில்பாக்கு 14 மே 2017 அன்று நியூ செர்சியில் இறந்தார். [9] [10]
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)