தனித் தகவல் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 12 நவம்பர் 1999 பூடாலா, அமிர்தசரஸ் மாவட்டம், பஞ்சாப் (இந்தியா)[1] | ||||||||||||||||||||||||
உயரம் | 180 cm (5 அடி 11 அங்) (5 அடி 11 அங்)[2] | ||||||||||||||||||||||||
விளையாடுமிடம் | முன்கள ஆட்டக்காரர் | ||||||||||||||||||||||||
தேசிய அணி | |||||||||||||||||||||||||
2017– | இந்தியா 21 வயதுக்குக் கீழ் | 6 | |||||||||||||||||||||||
2018– | இந்தியா | 40 | (18) | ||||||||||||||||||||||
பதக்க சாதனை
| |||||||||||||||||||||||||
Last updated on: 7 பிப்ரவரி 2019 |
தில்பிரீத் சிங் (Dilpreet Singh) இந்தியாவைச் சேர்ந்த வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரராவார். இவர் இந்திய தேசிய அணியில் முன்கள வீரராக விளையாடுகிறார்.[3][4].டோக்கியோவில் நடைபெறவுள்ள 2020 ஆம் ஆண்டிற்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் விளையாட இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசு மாவட்டம் புடாலாவைச் சேர்ந்தவராவார். இராணுவத்தில் வளைகோல் பந்தாட்ட வீரராக இருந்த பல்விந்தர் சிங்குக்கு இவர் மகனாகப் பிறந்தார். தந்தை கொடுத்த ஊக்கத்தினால்தான் தில்பிரீத் வளைகோல் விளையாட்டை விளையாடத் தொடங்கினார். ஆரம்பத்தில் தனது தந்தையின் கதூர் சாகிப் அகாடமியில் பயிற்சி பெற்றார், பின்னர் அமிர்தசரசில் அமைந்துள்ள மகாராசா ரஞ்சித் சிங் வளைகோல் பந்தாட்ட அகாடமியிலிருந்தும், பின்னர் சலந்தரின் சுர்சித்து அகாடமியிலிருந்தும் பயிற்சி பெற்றார்.[5]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)