நிறுவுகை | snbfhr (1988) |
---|---|
தலைமையகம் | இலங்கை, பேலியகொடை |
முதன்மை நபர்கள் | மெர்ரில் ஜே பெர்னாண்டோ, மாலிக் சி பெர்னாண்டோ, திலான் சி. பெர்னாண்டோ, ஹெமதேரா ரணவீர, ரோஷன் திஸ்ஸாரச்சி, மினெடெ பெரேரா, |
உற்பத்திகள் | இலங்கை தேநீர், சுவையூட்டப்பட்ட தேநீர், பசுமை தேநீர், சிறப்புப் தேநீர், மூலிகை பாணம், மசாலா தேநீர், ஒற்றைத் தோட்ட தேநீர் www.watteseries.com, வெள்ளைத் தேநீர், ரியல் ஐசட் டீ |
இணையத்தளம் | http://www.dilmahtea.com/ |
தில்மா (Dilmah) என்பது இலங்கையின் சர்வதேச அளவில் மிக அங்கீகரிக்கப்பட்ட வணிகச்சின்ன தேநீர் ஆகும்.[1] இந்த நிறுவனமானது 1974 இல் மெர்ரில் ஜே பெர்னாண்டோவால் நிறுவப்பட்டது. பெர்னாண்டோவின் மகன்கள் தில்ஹான் மற்றும் மாலிக் ஆகியோரின் பெயர்களை இணைத்து நிறுவனத்துக்கு தில்மா என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார். இது எசுத்தோனியா, ஐக்கிய இராச்சியம், துருக்கி, லித்துவேனியா, பாக்கித்தான், போலந்து, உருசியா, அங்கேரி, கனடா, சிலி, தென்னாப்பிரிக்கா, ஆத்திரேலியா, இந்தோனேசியா, யப்பான், அமெரிக்க ஐக்கிய நாடு, நியூசிலாந்து போன்ற நாடுகள் உட்பட உலகின் 100 நாடுகளில் கிடைக்கிறது. 2009 ஆம் ஆண்டில் தில்மா உலகில் ஆறாவது மிகப்பெரிய தேயிலை பிராண்டு என்று கருதப்பட்டது.[2]
இந்த நிறுவனத்தின் நிறுவனரான மெரில் பெர்னாண்டோ 1900 ஆம் ஆண்டு நீர்கொழும்புக்கு அருகில் உள்ள பல்லன்சேனா என்ற சிற்றூரில் பிறந்து, கொழும்புக்கு குடிபெயர்ந்தார். பின்னர் லண்டனில் மின்கிங் லேனில் பயிற்சி பெற்று, இலங்கை தேநீர் சோதனையாளராக ஆனார்.
1985 ஆம் ஆண்டில், மெர்ரில் பெர்னாண்டோ, ஆத்திரேலிய பல்பொருள் அங்காடி விற்பனையாளரான கோலஸை தனது தேநீர் பிராண்டான தில்மாவை அங்காடியில் இருப்புவைக்க ஒப்புக் கொள்ளவைத்தார். பின்னர் கொல்சிடம் தனது தேநீர் பிராண்டை வாங்கி இருப்புவைக்க பேசி சம்மதிக்க வைத்தார் அதன்விளைவாக 1988 ஆம் ஆண்டில் மெல்போர்ணின் கோல்ஸ் கடையின் அலமாரிகளில் தில்மா இருப்பு வைக்கப்பட்டது அதன் அலமாரிகளில் சேமித்து வைத்தது. இறுதியில் இது விக்டோரியாவில் 35 கோல்ஸ் கடைகளுக்கும் பரவியது, பின்னர் வூல்வொர்தும் தில்மாவை நல்லமுறையில் விற்பனை செய்யத் தொடங்கியது. தில்மா பின்னர் நியூசிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது, தற்போது அது அங்கு அதிகம் விற்பனையாகும் ஒரு பிராண்டாக உள்ளது,[3] அதன் பிறகு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுக்கும் ஏற்றுமதியானது. 1988 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவில் தில்மா தேயிலை பிராண்ட் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஒரு விளம்பரம் உருவாக்கப்பட்டு அந்நாட்டு தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இன்று தில்மாவின் உலகளாவிய வருடாந்த விற்பனைகளில் ஆஸ்திரேலியாவின் பங்கு 10 விழுக்காடு ஆகும்.[4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)