தில்யார் ஏரி Tilyar Lake | |
---|---|
அரியானாவில் ஏரியின் அமைவிடம் | |
அமைவிடம் | ரோத்தக் மாவட்டம், அரியானா, இந்தியா |
ஆள்கூறுகள் | 28°52′44″N 76°38′09″E / 28.87889°N 76.63583°E |
பூர்வீக பெயர் | तिलयार झील Error {{native name checker}}: parameter value is malformed (help) |
முதன்மை வரத்து | நன்னீர் |
முதன்மை வெளியேற்றம் | இல்லை |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 132 ஏக்கர்கள் (0.53 km2) |
சராசரி ஆழம் | 10 அடி (3.0 m) |
இணையதளம் | www |
தில்யார் ஏரி (Tilyar Lake) என்பது அரியானா மாநிலத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகத் திகழும் ஓர் ஏரியாகும். இது இந்தியாவின் தலைநகரமான தில்லி - பாசில்கா நெடுஞ்சாலையில், டெல்லியிலிருந்து எழுபது (70) கி.மீ. தொலைவில் அரியானாவில் உள்ள ரோத்தக் நகருக்கு அருகில் உள்ளது.[1]
டெல்லியின் எல்லையிலிருந்து தில்யார் ஏரி வளாகம் நாற்பத்திரண்டு (42) கி.மீ. தூரத்தில் உள்ளது. தில்யார் ஏரியின் வளாகத்தில் தில்யார் அல்லது ரோத்தக் உயிரியல் பூங்கா உள்ளது.[2] தில்யார் ஏரிக்குச் செல்ல கட்டணம் எதுவுமில்லை. குடும்பமாகப் பார்வையிடச் சிறந்த இடமான தில்யார் உயிரியல் பூங்காவின் நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய் பத்து (10), சிறியவர்களுக்கு ரூபாய் ஐந்து (5).[3] ஏரியில் மீன்பிடிக்க அனுமதிக் கட்டணம் ரூபாய் இருநூறு (200).[4]
இந்த ஏரி 132 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியில், சுற்றியுள்ள பகுதிகளை ஒப்பிடும்போது மிகவும் பசுமைநிறைந்த பரப்பாக, ஒருங்கிணைந்த சுற்றுலா அமைவின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இதனருகில் பல வசதிகளுடன் கூடிய தங்குமிடங்கள், ஓய்வறைகள் உள்ளன. பரந்த புல்வெளிகளும் இயற்கைக் காட்சிகளும் கொண்ட இந்த இடம் ஓய்வெடுக்கச் சிறந்த ஒரு சுற்றுலா மையமாகத் திகழ்வதால் மும்பை போன்ற தொலைதூர இடங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். ஏரியின் நடுவில் உள்ள சிறிய தீவில் தங்கும் பறவைகளை நோக்கச் சிறந்த இடமாகவும் திகழ்கிறது.[5]