தில்லானா மோகனாம்பாள் | |
---|---|
தில்லானா மோகனாம்பாள் | |
இயக்கம் | ஏ. பி. நாகராஜன் |
தயாரிப்பு | ஏ. பி. நாகராஜன் ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் |
கதை | கொத்தமங்கலம் சுப்பு |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி |
வெளியீடு | சூலை 27, 1968 |
நீளம் | 4825 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தில்லானா மோகனாம்பாள் (Thillana Mohanambal) 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, எம். என். நம்பியார், கே. பாலாஜி, டி. எஸ். பாலையா, கே. ஏ. தங்கவேலு, நாகேஷ், சி. கே. சரஸ்வதி, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். தில்லானா மோகனாம்பாள் "கலைமணி" என்ற புனைப்பெயரில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய நாவலாகும். இது தமிழ் வார இதழான ஆனந்த விகடனில் 1957-58 ஆம் ஆண்டில் தொடராக வெளிவந்தது.[1] புகழ்பெற்ற நடனக் கலைஞரான மோகனாம்பாளுக்கும், நாதசுவரம் இசைக்கலைஞரான சண்முகசுந்தரத்துக்கும் இடையிலான உறவை இந்தக் கதை சித்தரிக்கிறது.[2][3][4] நாவலுக்கான விளக்கப்படங்களை ஓவியக் கலைஞர் மற்றும் கேலிச்சித்திர ஓவியர் கோபுலு வரைந்தார்.[5][6]
நாதஸ்வரம் வாசிப்பதில் மிகவும் புகழ்பெற்றவரான சண்முக சுந்தரம் (சிவாஜி கணேசன்) எதையும் நேர்பட பேசக்கூடியவர். பரதநாட்டியம் ஆடுவதில் மிகவும் திறமைசாலியான மோகனாம்பாள் (பத்மினி) இருவரும் தங்களது முதல் சந்திப்பிலேயே ஒருவரின் மேல் ஒருவர் காதல் வயப்படுகிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் இருவரும் சண்டையிட்டுப் பிரிகிறார்கள். அவர்கள் மீண்டும் எவ்வாறு இணைகிறார்கள் என்பதே இத்திரைப்படத்தின் மீதக் கதையாகும்.
நடிகர் | கதாபாத்திரம் |
---|---|
சிவாஜி கணேசன் | 'சிக்கல்' நாதஸ்வர சக்கரவர்த்தி சண்முகசுந்தரம் |
பத்மினி | நாட்டிய மயூரி மோகனாம்பாள் |
டி. எஸ். பாலையா | 'கலியுக நந்தி' முத்துராக்கு |
கே. ஏ. தங்கவேலு | நட்டுவனார், முத்துக்குமார சுவாமி |
மனோரமா | கருப்பாயி / 'ஜில் ஜில்' ரமாமணி |
நாகேஷ் | 'சவடால்' வைத்தி |
மா. நா. நம்பியார் | 'மதன்பூர்' மகாராஜா |
கே. பாலாஜி | மைனர் சிங்கபுரம், செல்லதுரை |
சித்தூர் வி. நாகையா | சண்முகசுந்தரத்தின் நாதஸ்வர ஆசிரியர் |
ஏ. வி. எம். ராஜன் | தங்கரத்னம், சண்முக சுந்தரம் தம்பி குழுவில் நாதஸ்வரம் வாசிப்பவர் |
கே. சாரங்கபாணி | 'கோடை இடி' சக்திவேல், சண்முக சுந்தரம் குழுவில் தவில் வாசிப்பவர் |
ஏ. கருணாநிதி | சுடலை சண்முக சுந்தரம் குழுவில் ஒத்து ஊதுபவர் |
டி. ஆர். இராமச்சந்திரன் | மோகனா குழுவில், மிருதங்கம் வாசிப்பவர் |
சி. கே. சரஸ்வதி | வடிவாம்பாள், மோகனாவின் அம்மா |
எம். சரோஜா | அபரஞ்சி 'வெத்தலப்' பெட்டி |
சண்முகசுந்தரி | மோகனா குழுவில் வீணை வாசிப்பவர் |
எஸ். வி. சகஸ்ரநாமம் | பரமானந்தப் பரதேசி |
ஈ. ஆர். சகாதேவன் | நாகலிங்கம் |
பி. டி. சம்பந்தம் | சண்முக சுந்தரம் குழுவில் தாளம் வாசிப்பவர் |
எம். எல். பானுமதி | நர்ஸ் மேரி |
கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார்.
எண் | பாடல் | பாடியவர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | வாத்திய இசை | - | கண்ணதாசன் | 04:49 |
2 | மறைந்திருந்து 1 | பி. சுசீலா | 05:15 | |
3 | மறைந்திருந்து 2 | பி. சுசீலா | 05:18 | |
4 | நாதஸ்வர இசை 1 | - | 05:22 | |
5 | நாதஸ்வர இசை 2 | - | 03:46 | |
6 | நலந்தானா | பி. சுசீலா | 05:12 | |
7 | பாண்டியன் நானிருக்க | எல். ஆர். ஈஸ்வரி, எஸ். சி. கிருஷ்ணன் | 02:47 |
1. நலந்தானா எனும் பாடல்:
சண்முக சுந்தரம் காயம் பட்டிருக்கிறார்.அவர் நாதசுரம் வாசிக்கும் மேடையில் மோகனா ஆடுகிறாள். காதலியான அவள் காதலனாகிய சண்முகத்தின் காயத்தைக் கண்டும் அவரது நலம் குறித்தும் 'இலைமறை காய் போல் பொருள் கொண்டு' கேள்வியாய் பாடலில் கேட்கிறாள்.
2. மறைந்திருந்து பார்க்கும்..
நாட்டியக்காரி மோகனாம்பாள் கோவிலில் நடனமாடுகிறாள். அவளது நடனத்தை தூண் மறைவில் இருந்து திருட்டுத்தனமாக நாதஸ்வர வித்வான் சண்முகம் பார்த்து இரசிக்கிறார். அதை அறியும் மோகனா அவரை 'சண்முகா' என பாடலுக்குள்ளேயே மறைமுகமாக அழைத்து 'பாவையின் பதம் காண நாணமா!?. மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன!?' என ஜாடைமாடையாகவும் கேலியாகவும் சண்முகத்தை பார்த்து வினவுவதாக அமைகிறது இந்த பாடல்
நூல்: புகழ்பெற்ற 100 சினிமா கலைஞர்கள்; ஆசிரியர்: ஜெகாதா; பதிப்பகம்: சங்கர் பதிப்பகம்