நிறுவப்பட்டது | பிப்பிரவரி 19, 1999 |
---|---|
நிறுத்தங்கள் | வாகா, கர்த்தர்பூர், பிப்லி, சிர்ஹிந்து |
Destinations | தில்லி, லாகூர் |
Operator | தில்லி போக்குவரத்துக் கழகம் பாக்கிஸ்தான் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் |
தில்லி - லாகூர் பேருந்து (சதா இ சர்ஹத்), இந்தியாவிலுள்ள தில்லியில் இருந்து பாக்கிஸ்தானில் உள்ள லாகூர் வரை சென்று வரும். இது வாகா வழியாக செல்கிறது. இரு நாடுகளுக்குமான நட்புறவை வளர்ப்பதற்கான அங்கமாக இந்த வண்டி இயக்கப்படுகிறது.[1] 1999ஆம் ஆண்டின் பிப்ரவரி பத்தொன்பதாம் நாளில், அன்றைய இந்தியப் பிரதமரான அடல் பிகாரி வாச்பாய் இந்த பேருந்தை தொடங்கி வைத்தார். பேருந்து வாகாவை சென்றடைந்ததும், அங்கிருந்த பாக்கிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷெரீப் வரவேற்றார்.[2][1]
கார்கில் போருக்குப் பின்னரும் இந்த பேருந்து இயக்கப்பட்டது.[3] இந்திய நாடாளுமன்றத்தின் மீதான் தாக்குதலை ஒட்டி, எல்லையில் பதற்றம் நிலவியதால் பேருந்து நிறுத்தப்பட்டது.[4]
இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், இருநாடுகளுக்குமான போக்குவரத்தில் விரிசல் விழுந்தது. இரு நாடுகளில் வசிக்கும் உறவினர்களுக்காகவும், வர்த்தக, சுற்றுலா நோக்கத்திற்காகவும் சம்ஜவுதா விரைவுத் தொடருந்து இயக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த பேருந்தும் இயக்கப்படுகிறது.[5]