முழுப்பெயர் | தில்லி கால்பந்து அணி |
---|---|
தோற்றம் | 1941 |
ஆட்டக்களம் | சவகர்லால் நேரு விளையாட்டரங்கம், தில்லி |
கொள்ளளவு | 60,254 |
உரிமையாளர் | தில்லி கால்பந்து கழகம் |
பயிற்சியாளர் | சுபிர் தேய் [1] |
கூட்டமைப்பு | சந்தோசு கோப்பை |
தில்லி கால்பந்து அணி (Delhi football team) சந்தோசு கோப்பை கால்பந்து போட்டியில் தில்லி நகரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் இந்திய கால்பந்து அணியாகும்.
சந்தோசு கோப்பை இறுதிப் போட்டி வரை இந்த அணி இரண்டு முறை முன்னேறியுள்ளது. மேலும் 1944-45 ஆம் ஆண்டு காலத்தில் ஒரு முறை மட்டுமே இந்த அணியினர் சந்தோசு கோப்பையை வென்றுள்ளனர்..
மார்ச் 1 முதல் 15 வரை ஜலந்தர் மற்றும் லூதியானாவில் நடைபெற்ற சந்தோசு கோப்பைக்கான 69 ஆவது மூத்தோர் தேசிய கால்பந்து சாம்பியன் பட்டப்போட்டியின் இறுதி சுற்றில் 20 பேர் கொண்ட தில்லி கால்பந்து அணியை அபிசேக் ராவத் வழிநடத்தினார்.[2]