தில்லி காவல்துறை | |
---|---|
சுருக்கம் | DP |
குறிக்கோள் | அமைதி சேவை நீதி (शांति सेवा न्याय) Peace Service Justice |
துறையின் கண்ணோட்டம் | |
உருவாக்கம் | 1861ல் (பிரித்தானிய இந்தியாவின் பாதுகாப்புப் படைகள் எனும் பெயரில் துவங்கியது) 16 பிப்ரவரி 1948 அன்று (தில்லி காவல் துறை)[1] |
முந்தைய துறை |
|
பணியாளர்கள் | 94,255 |
ஆண்டு வரவு செலவு திட்டம் | ₹11,933.03 (ஐஅ$140) (2023–24)[2] |
அதிகார வரம்பு அமைப்பு | |
செயல்பாட்டு அதிகார வரம்பு | தில்லி, IN |
![]() | |
11 மாவட்டங்கள் | |
அளவு | 1,484 km2 (573 sq mi) |
மக்கள் தொகை | 16,753,235 |
சட்ட அதிகார வரம்பு | As per operations jurisdiction |
பொது இயல்பு | |
செயல்பாட்டு அமைப்பு | |
தலைமையகம் | ஜெய் சிங் மார்க் புது தில்லி, தில்லி, இந்தியா |
அமைச்சர் | |
துறை நிருவாகி |
|
வசதிகள் | |
Stations | 198 (20 சிறப்பு நிலையங்கள் உள்பட) |
உலங்கு வானூர்திகள்s | 1[3] |
இணையத்தளம் | |
delhipolice |
தில்லி காவல்துறை (Delhi Police (DP), தில்லி தேசிய தலைநகர் பகுதியை காவல் காக்கும் அமைப்பாகும். இது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[6] இதுவே உலகின் பெரிய பெருநகர காவல்படையாகும்.[7] தில்லி காவல் படையின் 25% காவலர்கள் முக்கியமானவர்களின் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.[8]
தில்லி காவல்துறை தில்லியின் 11 மாவட்டங்களை தனது காவல் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. 2019இல் தில்லியானது 15 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் மாவட்டத்திற்கு ஒரு காவல் துணை ஆணையர் தலைமையில் இயங்குகிறது.
சனவரி 2019 நிலவரப்படி, தில்லி காவல்துறை 178 காவல் நிலையங்கள் மற்றும் 15 காவல் மாவட்டங்களைக் கொண்டுள்ளது. இது தவிர 7 இரயில்வே காவல் நிலையங்கள், 16 மெட்ரோ இரயில் காவல் நிலையங்கள் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு, குற்றப்பிரிவு, சிறப்பு பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு காவல் பிரிவு மற்றும் விழிப்புணர்வு என 5 சிறப்பு குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் செயல்படுகிறது.
1984ஆம் ஆண்டு முதல், தில்லி காவல் பயிற்சிக் கல்லூரிகள் ஜரோடா கலான் மற்றும் தில்லியின் வஜிராபாத் கிராமத்தில் அமைந்துள்ளது.[7]
தில்லி காவல்துறையின் புதிய தலைமையகம் ஜெய் சிங் மார்க், கன்னாட் பிளேஸ், புது தில்லியில் அமைந்துள்ளது. தில்லி காவல் ஆணையாளரின் கீழ் தில்லி காவல்துறை பன்னிரண்டு கிளைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முக்கிய நான்கு கிளைகள், ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு காவல் ஆணையாளரின் கீழ் செயல்படுகிறது.