தில்லிப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் *ஜெராடு லேக் மற்றும் லூயிஸ் பெர்கின் | மராத்தியப் பேரரசு *தௌலத் ராவ் சிந்தியா |
||||||
பலம் | |||||||
4,500 | 17,000 | ||||||
இழப்புகள் | |||||||
464 – 485 வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்.[1][2] | 3,000 கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்.[3] |
தில்லி போர் (Battle of Delhi), புந்தேல்கண்ட் பகுதியில் இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், தில்லியில் மராத்தியப் பேரரசின் படைகளுக்கும், பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனிப் படைக்களுக்கும் 11 செப்டம்பர் 1803ல் நடைபெற்ற போராகும்.
இப்போரில் மராத்தியப் படைக்களுக்கு தௌலத் ராவ் சிந்தியா தலைமை வகித்தார். ஆங்கிலேயப் படைகளுக்கு ஜெராடு லேக் மற்றும் லூயிஸ் பெர்கின் ஆகியோர் தலைமை வகித்தனர். [4] யமுனை ஆற்றின் கரையில் உள்ள பர்பத்கஞ்ச் எனுமிடத்தில் நடைபெற்ற இப்போரின் முடிவில், மராத்தியப் படைகள் தோற்றது. தில்லியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.[5]