தீக்சா தாகர் Diksha Dagar | |
---|---|
— குழிப்பந்தாட்டக்காரர் — | |
![]() | |
தனிப்பட்ட தகவல்கள் | |
பிறப்பு | 14 திசம்பர் 2000 அரியானா, இந்தியா |
தேசியம் | ![]() |
பணிவாழ்வு | |
தொழில்முறையாக மாறியது | 2019 |
தற்போதையச் சுற்று(கள்) | பெண்கள் ஐரோப்பியக் கோப்பை |
தொழில்முறை வெற்றிகள் | 2 |
சுற்றுகளில் வெற்றிகள் | |
மகளிர் ஐரோப்பியச் சுற்று | 1 |
பிற | 1 |
தீக்சா தாகர் (Diksha Dagar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை குழிப்பந்தாட்ட வீராங்கனையாவார்.[1] இவர் 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி பிறந்தார்.
காது கேளாத இவர் பல தொழில்சாரா குழிப்பந்து போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். வளர்ந்து வரும் ஒந்திய தொழில்சாரா குழிப்பந்து வீரர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.[2] 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தியாவின் தொழில்சாரா குழிப்பந்து வீராங்கனைகள் பட்டியலில் இருந்தார்.[3] தீக்சா தாகர் 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண்கள் தனிநபர் குழிப்பந்தாட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.[4] 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்றார்.[5][6] 2019ஆம் ஆண்டு பெண்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை வென்ற அதிதி அசோக்கிற்குப் பிறகு தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க மகளிர் கோப்பை குழிப்பந்து பட்டத்தை 18வயதில் வென்ற இளைய இந்தியப் பெண்மணி என்ற பெருமையை தீக்சா தாகர் பெற்றுள்ளார்.
தீக்சா 14 டிசம்பர் 2000 அன்று செவிப்புலன் பிரச்சினை கொண்டவராகப் பிறந்தார். ஆறு வயதிலிருந்தே செவிப்புலன் கருவிகளை காதில் அணியத் தொடங்கினார்.[7] சகோதரர் யோகேசு தாகருடன் சேர்ந்து ஏழு வயதிலிருந்தே குழிப்பந்தாட்டம் விளையாடத் தொடங்கினார். சகோதரர் யோகேசு தாகரும்ம் காது கேளாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை நரிந்தர் தாகர் இவர்களைப் பயிற்றுவித்தார்.[8]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)