![]() கொண்டை அணிந்த யட்சினி, பிகார் அருங்காட்சியகம் | |
செய்பொருள் | மெருகூட்டப்பட்ட மணற்கல் |
---|---|
அளவு | Height: Width: |
காலம்/பண்பாடு | கிமு 3ஆம் நூற்றாண்டு அல்லது கிபி 1/2ஆம் நூற்றாண்டு |
இடம் | தீதார்கஞ்ச் பாட்னா, பிகார், இந்தியா |
தற்போதைய இடம் | பிகார் அருங்காட்சியகம், இந்தியா |
தீதார்கஞ்ச் யட்சினி ( Didarganj Yakshi or Didarganj Chauri Bearer); Hindi: दीदारगंज यक्षी) மெருகூட்டப்பட்ட மணற்கல்லால் ஆன கூந்தலை முன் கொண்டையாக அணிந்த, அழகிய வேலைப்பாடுகள் கொண்ட யட்சினிப் பெண் சிற்பம் ஆகும். இச்சிற்பத்தின் காலம் கிபி முதல் அல்லது 2ஆம் நூற்றாண்டு ஆகும்.[1][2] [3]இ[4] இச்சிறபம் மகதத்தின் தலைநகரான பாடலிபுத்திரம் எனும் தற்கால பாட்னாவில் 1917-இல் கண்டெடுக்கப்பட்ட்து.
தீதார்கஞ்ச் யட்சினி தற்போது பிகார் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[5] இந்த ஆளுயர யட்சினி சிற்பம் ஒரே மணற்கல்லால் செதுக்கப்பட்டது இதன் உயரம் 64" உயரம் ஆகும்.[6] இச்சிலையை உற்று நோக்கும்போது ஆடை நயம் மற்றும் ஆடை மடிப்புகள் சிறப்புற அமைந்துள்ளது. கைவளையல்கள்,கழுத்தணி,தலையலங்காரங்கள்,இடையில் அணிந்துள்ள நகைகள் அலங்கரிக்கின்றன.[7]