தீப்தி திவாகர் (Deepti Divakar) ஓர் இந்திய மாதிரியழகி மற்றும் 1981 ஆம் ஆண்டிற்கான இந்திய அழகி பட்டத்தை வென்றவர் ஆவார் [1][2].
தீப்தி திவாகர் பெங்களுரில் பிறந்தார். இவருடைய தாத்தா டாக்டர் ஆர். ஆர். திவாகர் இந்தியாவின் முதலாவது தகவல் தொடர்பு துறை அமைச்சராக இருந்தவர் ஆவார். லாசு ஏஞ்சல்சிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும், நியூயார்க்கிலுள்ள பார்சன்சு வடிவமைப்பு கல்லூரியிலும் தீப்தி உட்புற வடிவமைப்பியல் படிப்பை படித்தார். பெங்களூர் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை பட்டப்படிப்பையும், சான்பிரான்சிசுக்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் வானொலி மற்றும் தொலைக்காட்சி பாடங்களில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
இந்தியா, ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் தீப்தி ஒரு பரத நாட்டிய கலைஞராக நடனநிகழ்ச்சிகளை நடத்தினார்.