தீமோ (ஆங்கிலம்: Temoh; மலாய்: Temoh; சீனம்: 特莫) என்பது மலேசியா, பேராக் மாநிலம், பத்தாங் பாடாங் மாவட்டத்தில் (Batang Padang District); செண்டிரியாங் எனும் முக்கிமில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். [2]
கம்பார் - தாப்பா ஆகிய நகரங்களுக்கு இடையில் கம்பார் நகரத்தில் இருந்து 5 கி.மீ; தாப்பா நகரத்தில் இருந்து 8 கி.மீ; தொலைவில் தீமோ நகரம் உள்ளது.[3]
இந்த நகரத்தின் பெயர் சுங்கை தேமு (Sungai Temu) எனும் ஆற்றில் இருந்து பெறப்பட்டது. ’தெமு’ என்பது இரண்டு ஆறுகளுக்கும் இடையே உள்ள ஒரு சந்திப்பு முனையாகும். இந்த இடத்திற்குப் பெயரிட பிரித்தானியர்கள் வந்தபோது, அவர்கள் தற்செயலாக "தீமோ" என்று பெயரிட்டனர்.