துசார் காந்தி கோசு Tushar Kanti Ghosh | |
---|---|
பிறப்பு | September 21, 1898 கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | August 29, 1994 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை 95)
படித்த கல்வி நிறுவனங்கள் |
|
பணி | பத்திரிக்கையாளர், நாவலாசிரியர், குழந்தை எழுத்தாளர் |
அமைப்பு(கள்) | அமிரிதா பசார் பத்திரிக்கா (தொகுப்பாசிரியர்) |
அறியப்படுவது | இந்தியப் பத்திரிகை உலகின் மூத்தவர் |
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், அகிம்சை வழிப் போராட்டம் |
பெற்றோர் | சிசிர் குமார் கோசு (தந்தை) |
பிள்ளைகள் | 2 |
விருதுகள் | பத்ம பூசண் (1964) |
துசார் காந்தி கோசு (Tushar Kanti Ghosh)(செப்டம்பர் 21, 1898 - ஆகத்து 29, 1994) என்பவர் இந்தியப் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். அறுபது ஆண்டுகளாக, தான் இறப்பதற்குச் சற்று முன்பு வரை, கொல்கத்தாவில் உள்ள அம்ரிதா பஜார் பத்ரிகா என்ற ஆங்கில மொழி செய்தித்தாளின் ஆசிரியராக இருந்தார்.[1] பன்னாட்டுப் பத்திரிகை நிறுவனம் மற்றும் காமன்வெல்த் பத்திரிக்கை ஒன்றியம் போன்ற முக்கிய பத்திரிகை நிறுவனங்களின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[1] கோசு "இந்தியப் பத்திரிகை உலகின் மூத்தவர்" [2] மற்றும் "இந்தியப் பத்திரிகையின் தலைவர்" என்று நாட்டின் சுதந்திரமான பத்திரிகைக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காகப் புகழப்படுகிறார்.[1]
கோசு கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பங்கபாசி கல்லூரியில் படித்தார்.[3] இவர் தனது தந்தையைத் தொடர்ந்து அமிர்தா பஜார் பத்திரிகாவின் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இந்தியா முழுவதும் சகோதர செய்தித்தாள் நிறுவனங்களையும், பெங்காலி மொழி பத்திரிக்கையான ஜுகாந்தர் பத்திரிகையையும் நிறுவினார்.[4]
கோசு இந்திய விடுதலை இயக்கத்தில் பத்திரிகையாளராக ஆற்றிய சேவையின் காரணமாகப் பிரபலமடைந்தார். இவர் மகாத்மா காந்தி மற்றும் அகிம்சை இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தார். பிரித்தானிய காலனித்துவ அதிகாரிகள் 1935-ல் பிரித்தானிய நீதிபதிகளின் அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் கோசு எழுதிய கட்டுரைக்காகக் கோசைச் சிறையில் அடைத்தனர்.[5]
ஐயத்துக்கிடமான செய்தி ஒன்றின்படி, வங்காள மாகாணத்தின் காலனித்துவ ஆளுநர் ஒருமுறை கோசிடம், கோசின் செய்தித்தாளைத் தொடர்ந்து படிக்கும் போது, இச்செய்தித்தாளில் இடம்பெறும் கட்டுரைகளின் இலக்கணம் தவறானது என்றும், "இது ஆங்கில மொழியில் குறைபாட்டினை ஏற்படுத்துகிறது" என்றும் தெரிவித்தார். ஆனால் கோசு "இது, எங்கள் விடுதலைப் போராட்டத்திற்கான எனது பங்களிப்பு" எனது பங்களிப்பு எனத் தெரிவித்தார்.[6]
ஒரு பத்திரிகையாளராகத் தனது வழக்கமான பணியுடன் கூடுதலாக, கற்பனை நாவல்கள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்களையும் கோசு எழுதினார்.[5]
1964ஆம் ஆண்டில், இலக்கியம் மற்றும் கல்விக்கான இவரது பங்களிப்புகளுக்காக இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூசண் விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது.[7]
கோசு 1994-ல் கொல்கத்தாவில் சிறுது காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். பின்னர் இதய செயலிழப்பால் இறந்தார்.[8]