துணிவு திரைப்படம் Thunivu Film | |
---|---|
துணிவு திரைப்படத்தின் சுவரொட்டி | |
இயக்கம் | வினோத் |
தயாரிப்பு | போனிக் கபூர் |
கதை | வினோத் |
இசை | ஜிப்ரான் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
படத்தொகுப்பு | விஜய் வேலுக்குட்டி |
கலையகம் |
|
விநியோகம் | ரெட் ஜெயன்ட் மூவீசு |
வெளியீடு | 11 சனவரி 2023 |
ஓட்டம் | 146 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹180 கோடி[2] |
மொத்த வருவாய் | ₹365 கோடி (US$46 மில்லியன்) |
துணிவு (ஆங்கிலத்தில்: Thunivu)[3] என்பது 2023 இல் வெளியான ஒரு தமிழ் வங்கிக் கொள்ளை அதிரடி நாடகத் திரைப்படமாகும். இத் திரைப்படத்தின் கதைவசனம் எழுதி வினோத் இயக்கியிருந்தார். போனிக் கபூர் தயாரித்தார். இப்படத்தில் அஜித் குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பவானி ரெட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்திலும், சான் கொக்கின், மமதி சாரி, அசய், வீரா பகவதி பெருமாள் ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர்.
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
சென்னையில் பிரதான பகுதியில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் யுவர் பேங்க் என்ற வங்கியிலிருக்கும் பணத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டம் தீட்டுகிறது. அதன்படி வங்கிக்குள் நுழையும் அந்த கும்பல், துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களையும், அங்கிருக்கும் வாடிக்கையாளர்களையும் பணயக் கைதிகளாக்குகிறது. இதில் வாடிக்கையாளர் போல வரும் டார்க்டெவில் (அஜித் குமார்) கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு, மொத்த வங்கியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். உடனே டிஜிபி தயாளன் (சமுத்திரக்கனி) தலைமையிலான காவல்துறை, மற்றும் அரசு எந்திரமும் டார்க் டெவிலைப் பிடிப்பதற்காக முயற்சிக்கிறது. இறுதியில் காவல் துறை கையில் டார்க்டெவில் சிக்கினாரா, இவர் எதற்காக வங்கியில் கொள்ளையடிக்க நினைக்கிறார், அங்கிருக்கும் பணம் யாருடையது, இந்தக் கேள்விகளுடன் திகில் கலந்த திரைக்கதையோடு திரைப்படம் நகர்கிறது.[4]
துணிவு திரைப்படம் | ||||
---|---|---|---|---|
ஒலிப்பதிவு
| ||||
வெளியீடு | 2022 | |||
ஒலிப்பதிவு | 2022 | |||
இசைப் பாணி | திரைப்பட ஒலிப்பதிவு | |||
நீளம் | 10:11 | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | ஜீ மியூசிக் சவுத் | |||
இசைத் தயாரிப்பாளர் | ஜிப்ரான் | |||
ஜிப்ரான் காலவரிசை | ||||
|
இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.[9]
தடப்பட்டியல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "சில்லா சில்லா" | அனிருத் ரவிச்சந்திரன், வைசாக், ஜிப்ரான் | 3:42 | |||||||
2. | "காசேதான் கடவுளடா" | வைசாக், மஞ்சு வாரியர், ஜிப்ரான் | 3:08 | |||||||
3. | "கேங்க்ஸ்டா" | சபீர், ஜிப்ரான் | 3:21 | |||||||
மொத்த நீளம்: |
10:11 |
'Thunivu' is reportedly made on a budget of Rs 180 crores, while Vijay's 'Varisu' is estimated to be around Rs 280 crores.