துணைவன் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | எம். ஏ. திருமுகம் |
தயாரிப்பு | சாண்டோ சின்னப்பா தேவர் |
கதை | வி. பாலமுருகன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | என். எஸ். வர்மா |
படத்தொகுப்பு |
|
கலையகம் | தண்டாயுதபாணி பிலிம்சு |
வெளியீடு | சூலை 4, 1969[1] |
ஓட்டம் | 156 நிமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
துணைவன் (Thunaivan) 1969 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ் இந்து பக்தித் திரைப்படம் ஆகும். எம். ஏ. திருமுகம் இயக்கிய இத்திரைப்படத்தை சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்திருந்தார். கே. வி. மகாதேவன் இசையில் வெளிவந்தது.[1] ஏ. வி. எம். ராஜன், சௌகார் ஜானகி ஆகியோருடன், மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, சுந்தராம்பாள் ஆகியோர் நடித்திருந்தனர். முருகன் பாத்திரத்தில் நடித்த ஸ்ரீதேவி இத்திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[2][3] இத்திரைப்படத்தில் முதல் பகுதி கருப்பு-வெள்ளையிலும், மீதிப் பகுதி ஈஸ்ட்மன் வண்ணத்திலும் தயாரிக்கப்பட்டது.[1] இதன் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றன. சுந்தராம்பாள் பாடிய பாடல் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது. இப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வணிக ரீதியில் பெரும் வெற்றி பெற்றது.[4]
கண்ணதாசன், அ. மருதகாசி ஆகியோரின் பாடல்களுக்கு கே. வி. மகாதேவன் புகழேந்தியின் துணையுடன் இசையமைத்திருந்தார்.[1][6]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடியோர் | நீளம் | |||||||
1. | "நான் யார் என்பதை" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:35 | |||||||
2. | "கோகுலத்தில் ஒரு இரவு" | எல். ஆர். ஈஸ்வரி | 03:54 | |||||||
3. | "மருதமலை மீதிலே" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 08:39 | |||||||
4. | "பழனிமலை மீதிலே" | கே. பி. சுந்தராம்பாள் | 02:10 | |||||||
5. | "ஞானமும் கல்வியும்" | கே. பி. சுந்தராம்பாள் | 03:36 | |||||||
6. | "அன்று நீ" | கே. பி. சுந்தராம்பாள் | 01:17 | |||||||
7. | "கூப்பிட்ட குரலுக்கு" | கே. பி. சுந்தராம்பாள் | 00:51 | |||||||
8. | "கொண்டாடும் திருச்செந்தூர்" | கே. பி. சுந்தராம்பாள் | 01:22 | |||||||
மொத்த நீளம்: |
24:04 |
{{cite book}}
: Check date values in: |accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]