பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
முத்துத்தநாக ஈரார்சனைடு
| |
இனங்காட்டிகள் | |
12006-40-5 | |
ChemSpider | 21242020 |
EC number | 234-486-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 25147458 |
| |
பண்புகள் | |
Zn3As2 | |
வாய்ப்பாட்டு எடை | 345.984 கி/மோல் |
தோற்றம் | வெள்ளிய சாம்பல்[1] |
அடர்த்தி | 5.53 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 1,015 °C (1,859 °F; 1,288 K) |
கரையாது[1] | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணம் |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | [1] |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H331, H350, H410 | |
P201, P202, P222, P231+232, P261, P264, P270, P271, P273, P280, P281, <abbr class="abbr" title="Error in hazard statements">P301+310+330, P304+340, P308+313 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
துத்தநாக ஆர்சனைடு (Zinc arsenide) என்பது Zn3As2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். துத்தநாகமும் ஆர்சனிக்கும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. சாம்பல் நிறத்தில் நாற்கோணக படிகங்களாக இது உருவாகிறது. துத்தநாக ஆர்சனைடு 1.0 எலக்ட்ரான் வோல்ட்டு ஆற்றல் இடைவெளியைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் குறைக்கடத்தி ஆகும்.[2]
துத்தநாகமும் ஆர்சனிக்கும் சேர்ந்து வினை புரிந்தால் துத்தநாக ஆர்சனைடு உருவாகும்.
அறை-வெப்பநிலை Zn3As2 நாற்கோண வடிவத்தைக் கொண்டுள்ளது. 190 °செல்சியசு வெப்பநிலையில் வேறுபட்ட நாற்கோண கட்டமைப்பு நிலைக்கும் 651 °பாகை செல்சியசு வெப்பநிலையில் மூன்றாம் கட்ட கட்டமைப்பிற்கும் மாறுகிறது.[3] அறை-வெப்பநிலை வடிவத்தில், துத்தநாக அணுக்கள் நாற்கோணத்தில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஆர்சனிக்கு அணுக்கள் சிதைந்த கனசதுரத்தின் முனைகளில் ஆறு துத்தநாக அணுக்களால் சூழப்பட்டுள்ளன. துத்தநாக ஆர்சனைடின் படிக அமைப்பு காட்மியம் ஆர்சனைடு (Cd3As2), துத்தநாக பாசுபைடு (Zn3P2) மற்றும் காட்மியம் பாசுபைடு (Cd3P2) ஆகியவற்றின் கட்டமைப்பை போலவே உள்ளது. Zn-Cd-P-As நாண்கிணைய அமைப்பில் இந்த சேர்மங்கள் முழு தொடர்ச்சியான திட-கரைசலை வெளிப்படுத்துகின்றன.[4]
இதன் மிகக் குறைந்த நேரடி மற்றும் மறைமுக ஆற்றல் இடைவெளி 30 மெகாவோல்ட் அல்லது ஒன்றுக்கொன்று அவற்றினுள்ளே இருக்கும்.[2]