![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
துத்தநாக இருபெர்குளோரேட்டு, துத்தநாக(II) பெர்குளோரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
13637-61-1 ![]() | |
ChemSpider | 8374666 |
EC number | 237-122-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10199167 |
| |
UNII | 725JL07841 |
பண்புகள் | |
Cl 2O 8Zn | |
வாய்ப்பாட்டு எடை | 261.826 |
தோற்றம் | நிறமற்ற திண்மம் |
அடர்த்தி | 2.252 கி/செ.மீ3 |
உருகுநிலை | 106 °C (223 °F; 379 K) |
கொதிநிலை | 210 °C (410 °F; 483 K) |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
துத்தநாக பெர்குளோரேட்டு (Zinc perchlorate) என்பது Zn(ClO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். அறுநீரேற்றாக இது உருவாகிறது.[1][2]
துத்தநாக ஆக்சைடு அல்லது துத்தநாக கார்பனேட்டை பெர்குளோரிக் அமிலத்தில் கரைத்தால் துத்தநாக பெர்குளோரேட்டு உருவாகும்:[3]
உயர் வெப்பநிலைக்கு சூடாக்கப்படும் போது இச்சேர்மம் சிதைவடைகிறது. துத்தநாக பெர்குளோரேட்டு மிகவும் வலுவாக சூடேற்றப்பட்டால் வெடிக்க நேரிடலாம்.
தாமிர பெர்குளோரேட்டு மற்றும் காரீய பெர்குளோரேட்டு போன்ற மற்ற பெர்குளோரேட்டுகளைப் போலவே, துத்தநாக பெர்குளோரேட்டுகளும் ஈரமுறிஞ்சுகின்றன.
8-அமினோகுயினோலின், முக்கார்போ ஐதரசைடு மற்றும் டெட்ராபீனைலெத்திலீன் டெட்ராடிரையசோல் போன்ற ஈந்தணைவிகளுடன் துத்தநாக பெர்குளோரேட்டு ஒருங்கிணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது.[4]
Zn(ClO4)2·6H2O என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட அறுநீரேற்றாக துத்தநாக பெர்குளோரேட்டு உருவாகிறது. துத்தநாக பெர்குளோரேட்டு ஒரு நீருறிஞ்சும் திண்மப் பொருளாக நிறமற்றும், மணமற்றும் காணப்படுகிறது. நீரில் கரைகிறது. குறைந்த எடையுள்ள ஆல்ககால்களை உருவாக்குகிறது.[5][6]
துத்தநாக பெர்குளோரேட்டு ஒரு வினையூக்கியாகவும் ஆக்சிசனேற்றியாகவும் பயன்படுத்தப்படுகிறது.