மலேசிய கூட்டரசு சாலை 12 Malaysia Federal Route 12 Laluan Persekutuan Malaysia 12 | |
---|---|
துன் ரசாக் நெடுஞ்சாலை சிகாமட்-குவாந்தான் நெடுஞ்சாலை Tun Razak Highway Segamat-Kuantan Highway Lebuhraya Tun Razakn Lebuhraya Segamat-Kuantan | |
வழித்தடத் தகவல்கள் | |
AH142 இன் பகுதி | |
நீளம்: | 146.8 km (91.2 mi) |
பயன்பாட்டு காலம்: | 1970 – |
வரலாறு: | கட்டுமானம் முடிவு -1983 |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | கம்பாங், குவாந்தான், பகாங் |
கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை | |
தெற்கு முடிவு: | சிகாமட், ஜொகூர் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | குவாந்தான் பாலோ இனாய் பெக்கான் பண்டார் முவாட்சாம் சா பண்டார் துன் அப்துல் ரசாக் பகாவ் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
மலேசிய கூட்டரசு சாலை 12 அல்லது துன் ரசாக் நெடுஞ்சாலை அல்லது சிகாமட்-குவாந்தான் நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 12; Tun Razak Highway; Segamat-Kuantan Highway; மலாய்: Laluan Persekutuan Malaysia 12; Lebuhraya Tun Razak; Lebuhraya Segamat-Kuantan) என்பது மலாயா தீபகற்பத்தில் ஆசிய நெடுஞ்சாலை 142 திட்டத்தின் கீழ் அமைந்துள்ள ஒரு மலேசிய கூட்டரசு சாலை ஆகும்.[1]
146.8 கிமீ (91.2 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிகாமட் நகரத்தில் இருந்து பகாங் மாநிலத்தின் குவாந்தான் கம்பாங் நகரம் வரை செல்கிறது.
மலேசியாவின் மேம்பாட்டுத் தந்தை என்று அழைக்கப்படும் மலேசியாவின் இரண்டாவது பிரதமரான துன் அப்துல் ரசாக்கின் நினைவாக இந்த இருவழிக் கூட்டரசு சாலைக்குப் பெயரிடப்பட்டது.
இந்தச் சாலை, நெடுஞ்சாலை ஆசிய நெடுஞ்சாலை 142 வலையமைப்பின் ஒரு பகுதியாகும்.
மலேசிய கூட்டரசு சாலை 12-இன் கிலோமீட்டர் 0 (Kilometre Zero) என்பது ஜொகூர் மாநிலத்தின் சிகாமட் நகரத்தில் உள்ளது.
இந்த நெடுஞ்சாலை, ஜொகூர்-பகாங் எல்லையைப் பகாங் மாநிலத்தின் பெர்விரா ஜெயா எனும் இடத்திற்கு அருகே கடந்து செல்கிறது.[2]
மலேசிய கூட்டரசு சாலை 12-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.
துன் ரசாக் நெடுஞ்சாலை என்பது, பகாங் சுல்தான் அகமத் சாவின் சிந்தனையில் உருவானது. துன் ரசாக் நெடுஞ்சாலையின் கட்டுமானம் 1970-ஆம் ஆண்டில் தொடங்கி 1983-ஆம் ஆண்டில் நிறைவடைந்தது.
பகாங் சுல்தான் அகமத் சா அந்த நேரத்தில் யாங் டி-பெர்துவான் அகோங்காக இருந்தபோது துன் ரசாக் நெடுஞ்சாலையை 1983-ஆம் ஆண்டில் திறந்து வைத்தார்.
துன் ரசாக் நெடுஞ்சாலை 19 அக்டோபர் 1989 அன்று மலேசிய கூட்டரசு சாலை 12 என அரசிதழில் வெளியிடப்பட்டது.[3]
மாநிலம் | மாவட்டம் | கிமீ | வெளிவழி | பெயர்[2] | இலக்கு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
AH142 கூட்டரசு சாலை 222 | ||||||
பகாங் | குவாந்தான் | 146.8 | 17 | கம்பாங் I/S | கம்பாங் சாலை – கம்பாங், மாரான், தெமர்லோ, குவாந்தான் | |
146.8 | RSA | கம்பாங் RSA | கம்பாங் RSA - கால்டெக்ஸ் | சிகாமட் நோக்கி | ||
BR | சுங்கை பெலாட் பாலம் | |||||
16 | செமுஜி ஆற்றுக் கிராமம் I/S | சுங்கை செமுஜி வெளாண் வளாகம் | ||||
டாகோன் கிராமம் | ||||||
15 | பெல்டா லேப்பார் ஈலிர் I/S | பெல்டா லேப்பார் ஈலிர் சாலை - பெல்டா லேப்பார் ஈலிர் | ||||
139.0 | LB | கால்டெக்ஸ் L/B | கால்டெக்ஸ் L/B - கால்டெக்ஸ் | குவாந்தான் நோக்கி | ||
கம்போங் பத்து லீமா | ||||||
கம்போங் பத்து அன்னாம் | ||||||
பெக்கான் | லேப்பார் | |||||
கம்போங் கெச்சுப்பு | ||||||
127.0 | LB | BH பெட்ரோல் நிலையம் L/B | BH பெட்ரோல் L/B - BH பெட்ரோல் நிலையம் | சிகாமட் நோக்கி | ||
14 | பாலோ இனாய் வடக்கு I/S | C பெலிம்பிங் லுபோக் பக்கு | C (1.1 km) | |||
13 | பாலோ இனாய் வடக்கு I/S | C பெர்மாத்தாங் லாஞ்சுட், பகாங் துவா | ||||
BR | பகாங் ஆறு பாலம் | |||||
12 | பாலோ இனாய் I/S | கூட்டரசு சாலை 82 – பெக்கான் C பாலோ இனாய் - செனோர், மெங்காராக், பெரா, திரியாங், சினி ஏரி |
||||
RSA | பாலோ இனாய் RSA | பாலோ இனாய் RSA - | குவாந்தான் நோக்கி | |||
சாலை போக்குவரத்து அமலாக்கத் துறை | சிகாமட் நோக்கி | |||||
பண்டார் டுவா பாலீ இனாய் | ||||||
11 | சினி நகரச் சாலை I/S | சினி நகரம் – சினி ஏரி | ||||
107.0 | RSA | சினி RSA | சினி RSA - | சிகாமட் நோக்கி | ||
கம்போங் சாவாய் | ||||||
10 | கோத்தா பெர்தானா I/S | கோத்தா பெர்தானா | ||||
கம்போங் கெலெந்தோக் | ||||||
9 | பண்டார் முவாட்சாம் சா I/S | பண்டார் முவாட்சாம் சா, தேசிய தெனாகா பல்கலைக்கழகம் (Uniten) முவாட்சாம் சா வளாகம் | ||||
73.0 | RSA | பண்டார் முவாட்சாம் சா R//R (RSA) | பண்டார் முவாட்சாம் சா R//R (RSA) - பெட்ரோனாஸ் | இருவழிகள் | ||
8 | பண்டார் முவாட்சாம் சா I/C | கூட்டரசு சாலை 63 - புக்கிட் இபாம், கோலா ரொம்பின், எண்டாவ், மெர்சிங் | ||||
ரொம்பின் | காடாக் பழங்கிடியினர் கிராமம் | |||||
BR | ரொம்பின் ஆற்றுப் பாலம் | |||||
கம்போங் ஜெமெக்காட் | ||||||
I/S | பெல்டா கராத்தோங் I/S | பெல்டா கராத்தோங் | ||||
7 | கோத்தா பகாகியா-மெலாத்தி I/S | கோத்தா பகாகியா சாலை-மெலாத்தி- கோத்தா பகாகியா, கோத்தா இசுகந்தர், பெரா, பெரா ஏரி | ||||
BR | கராத்தோங் ஆற்றுப் பாலம் | |||||
I/S | 10 I/S | பெல்டா கராத்தோங் 10 | ||||
BR | பெசெக் ஆற்றுப் பாலம் | |||||
6 | பண்டார் துன் அப்துல் ரசாக் I/S | பகாவ்-கராத்தோங் நெடுஞ்சாலை - பண்டார் துன் அப்துல் ரசாக், கோத்தா சா பண்டார், பண்டார் செரி ஜெம்புல்,பகாவ், சிரம்பான், பெரா ஏரி | ||||
பெல்டா கராத்தோங் 5 I/S | பெல்டா கராத்தோங் 5 | |||||
5 | சானிஸ் I/S | சானிஸ் சாலை - சானிஸ், பெல்டா கராத்தோங் 6 & 7 | ||||
BR | கராத்தோங் ஆற்றுப் பாலம் | |||||
RSA | ரிஸ்டா கராத்தோங் RSA | ரிஸ்டா கராத்தோங் RSA - | சிகாமட் நோக்கி | |||
போக்குவரத்து துறை அமலாக்க வளாகம் | சிகாமட் நோக்கி | |||||
சென்டரவாசே I/S | சென்டரவாசே சாலை - சென்டரவாசே | |||||
பெக்கோத்தி தீமோர் | ||||||
4 | பெர்வீரா ஜெயா I/S | சென்டரவாசே சாலை - சென்டரவாசே, பெல்டா செலஞ்சார் | ||||
ஜொகூர் | சிகாமட் | கம்போங் செம்பாக்கா | ||||
3 | பெல்டா பெர்மானிஸ் I/S | பெல்டா பெர்மானிஸ் சாலை - பெல்டா பெர்மானிஸ் | ||||
BR | காப்பே ஆற்றுப்பாலம் | |||||
2 | கம்போங் பங்காஸ் I/S | J155 கோலா பாயா - பூலோ காசாப் J158 செபினாங்கு சாலை- செபினாங்கு கிராமம், கெலாங் சின்சின் கிராமம் |
||||
கம்ப்போங் தாடோக் | ||||||
பெட்ரோனாஸ் சிகாமட் தலைமையகம் |
பெட்ரோனாஸ் சிகாமட் நடவடிக்கை தலைமையகம் | |||||
RSA | சிகாமட் பழக் கடைகள் | சிகாமட் பழக் கடைகள் - | குவாந்தான் நோக்கி | |||
1.1 | I/S | தாமான் யாயாசான் | தாமான் யாயாசான் | |||
0.0 | 1 | துன் ரசாக் I/S | AH142 பூலோ காசாப் சாலை – சிகாமட் நகர மையம், பூலோ காசாப், கிம்மாஸ், தங்காக், மூவார், தம்பின், சிரம்பான், லாபிஸ், சாஆ, ஜொகூர் பாரு |