துபாய் பன்னாட்டுக் கல்வி நகரம்
مدينة دبي الأكاديمية العالمية | |
---|---|
பன்னாட்டுக் கல்வி வளாகம் | |
![]() | |
அடைபெயர்(கள்): DIAC | |
ஆள்கூறுகள்: 25°06′47″N 55°24′30″E / 25.1131°N 55.4084°E | |
நாடு | ![]() |
ஐக்கிய அரபு அமீரகம் | துபாய் |
நிறுவிய ஆண்டு | 2007 |
பரப்பளவு | |
• மொத்தம் | 11.98 km2 (4.63 sq mi) |
தொண்டு நிறுவனம் அறக்கட்டளை | 200 மில்லியன் AED[1] |
மாணவர்கள் | 27,500 |
கல்வி இயக்குநர் | டாக்டர். அயூப் காசீம் முகம்மது அப்துல்லா |
வளாகம் | நகர்ப்புறம், (2,960 ஏக்கர்கள்) |
நிறங்கள் | |
இணைப்பு | துபாய் அமீரகம் |
இணையதளம் | diacedu |
துபாய் பன்னாட்டு அகாதமி நகரம் (Dubai International Academic City (DIAC), இதனை அகாதமி நகரம் என்றும் அழைப்பர். துபாய் நகரத்தின் பல்கலை நகரம் ஆகும். இது மே 2006ல் துவங்கப்பட்ட துபாய் அறிவுசார் பூங்கா திட்டத்தின் கீழ் 2007ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[2]
2,960 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்தப் பல்கலைக்கழக நகரத்தில் பள்ளிக்கூடங்கள், 27 கல்லூரிகள் மற்றும் 3 பல்கலைக்கழகங்கள், 3 ஆய்வு மையங்களில் 150 நாடுகளின் 27,500 மாணவர்களுடனும், 500க்கும் மேற்பட்ட படிப்புகளுடனும் செயல்படுகிறது. இந்த அகாதமியில் இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், முனைவர் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.[3] இங்குள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் விடுதிகளுடன் அமைந்துள்ளன. இந்த அகாதமி பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது.[4] இந்த அகாதமியில் படித்த மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொள்ளவும் மற்றும் தொழில் தொடங்கவும் உதவி செய்கிறது.[5]
{{cite web}}
: Check date values in: |access-date=
and |archive-date=
(help)