தும்மெரில் ஓலைப்பாம்பு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | ஒலிகோடான்
|
இனம்: | ஒ. சப்ளைனடசு
|
இருசொற் பெயரீடு | |
ஒலிகோடான் சப்ளைனடசு தும்மெரில், பிப்ரான் & தும்மெரில், 1854 |
தும்மெரில் ஓலைப்பாம்பு (Oligodon sublineatus-ஓலிகோடான் சப்ளைனடசு)[1][2] என்பது இலங்கையில் காணப்படும் பின்புறக் கொம்பு கொண்ட ஓலைப்பாம்பின் ஒரு சிற்றினமாகும்.[3]
தும்மெரில் ஓலைப்பாம்பின் உடல் ஓரளவு உருளை வடிவமாகவும், தடிமனாகவும் இருக்கும். தலை குறுகி மழுங்கிய வடிவமுடையது. முதுகுப்பகுதி இளஞ்சிவப்பு-பழுப்பு நிறத்தில் மூன்று பழுப்பு வரிசை அடையாளங்களுடன் காணப்படும். பொதுவாகக் கோடுகளிலிருந்து நேரியல் அடையாளங்களின் இரண்டு பக்கவாட்டு வரிசைக் கோடுகள் ஒன்றிணைந்து காணப்படும். தொடர்ச்சியற்ற புள்ளிகளின் வரிசை மையத்தில் தொடங்கி குதத்தில் முடிவடைகிறது.
தும்மெரில் ஓலைப்பாம்பு இலங்கையின் சமவெளிகள் மற்றும் நடு மலைகளில் காணப்படும் பொதுவான சிற்றினமாகும். உள்நாட்டிற்குள்ளும் பரவலாகக் காணப்படுகிறது. மத்திய மலைகளில் உள்ள களுதாரா, மதுகம, கமடுவா மற்றும் நக்கில்ஸ் மலைத்தொடர், கொத்மலை, இரத்னபுரா, வெலிகல்லா, நீர்கொழும்பு, நவாளா, கம்பளை, பேராதெனியா மற்றும் கண்டி போன்ற இடங்களிலும், தீவின் வறண்ட வடக்குப் பகுதிகளிலும் இது அறியப்படுகிறது.
பெரும்பாலும் மனித வாழ்விடத்திற்குள் நுழையும் தும்மெரில் ஓலைப்பாம்பு அடர்வற்ற காடுகளில் காணப்படுகிறது. மேலும் வழக்கமாக 1200 மீட்டர் உயரத்தில் இலைக் குப்பைகளின் கீழ் மறைந்து காணப்படுகிறது. பகலிலும், அந்தி நேரத்திலும், குறிப்பாக இரவு நேரத்திலும் சுறுசுறுப்பாகச் செயல்படும் தன்மையுடையது. அச்சுறுத்தப்படும்போது, இப்பாம்பு தன் உடலைத் தட்டையாக்கிக்கொள்ளும். ஆனால் கடிக்க முயற்சிக்காது. கூர்மையான பற்கள் ஊர்வன முட்டைகளை வெட்டுவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. சிறிய பல்லிகளின் முட்டைகளை உட்கொள்ளப்படுகின்றன.