துரை | |
---|---|
பிறப்பு | திருவள்ளூர், தமிழ்நாடு | 25 பெப்ரவரி 1940
இறப்பு | 22 ஏப்ரல் 2024 திருநின்றவூர், தமிழ்நாடு | (அகவை 84)
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், படத் தொகுப்பாளர் |
வலைத்தளம் | |
directordurai |
துரை (Durai, 25 பிப்ரவரி 1940 – 22 ஏப்பிரல் 2024)[1] ஓர் இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார்.[2] 2014 வரை, இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தியில் 46 படங்களை இயக்கியுள்ளார். வணிகத் திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்பட்டாலும், இவர் பெண்களை மையப்படுத்தி அவளும் பெண்தானே, பசி போன்ற படங்களை இயக்கினார். பசி இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது.[3] இவர் 2011 இல் 58வது தேசிய திரைப்பட விருதுகளில் (இந்தியா) நடுவர் உறுப்பினராகப் பணியாற்றினார்.[2] 2011 வரை, இவர் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்.[2]