துரை வைகோ | |
---|---|
முதன்மைச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சூன் 2024 | |
முன்னையவர் | சு. திருநாவுக்கரசர் |
தொகுதி | திருச்சிராப்பள்ளி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கோபால்சாமி துரை வையாபுரி 2 ஏப்ரல் 1972 |
அரசியல் கட்சி | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | கீதா |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | வைகோ, ரேணுகாதேவி |
கல்வி | முதுகலை வணிக மேலாண்மை |
வேலை | சமூகச் செயற்பாட்டளர், அரசியல்வாதி |
துரை வைகோ (Durai Vaiko) அல்லது கோபால்சாமி துரை வையாபுரி (பிறப்பு: 2 ஏப்பிரல் 1972) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) நிறுவனர் வைகோவின் மகன் ஆவார்.[1] இவர் மதிமுக-வின் முதன்மைச் செயலாளராகவும், கட்சியின் பரப்புரையாளராகவும், கட்சியின் இணையப் பிரிவை வழிநடத்துபவராகவும் உள்ளார்.[2][3] [4]
இவர் 1972 ஆம் ஆண்டு வைகோ மற்றும் ரேணுகாதேவி ஆகிய தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தார். சென்னை சின்மயா வித்யாலயா பள்ளி மற்றும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தார்[5]
இவர் மதிமுக கட்சியின் முக்கியத் தேர்தல் பரப்புரையாளர்களுள் ஒருவராக இருந்தார்.[6] மதிமுக கட்சியின் இணையத்தளப் பிரிவிலும் இயங்கி வருபவர்.[7][8] 2014 இந்தியப் பொதுத் தேர்தலின் போது பா.ஜ.க. கட்சிக்கு ஆதரவாகவும்[9] தே.மு.தி.க. கட்சிக்கு ஆதரவாகவும்[10] தேர்தல் பரப்புரையில் இறங்கியவர். இவர் 2014இல் பட்டாசு தொடர்பாக இந்திய மத்திய அரசு விடுத்த புதிய சட்டத்தை எதிர்த்து, சிவகாசியில் உந்துருளி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.[11] இவர் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் மதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை ஆற்றினார்.[12] 2021 அக்டோபரில் மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராகப் பதவியேற்றார்.[13]
தேர்தல் | தொகுதி | கட்சி | முடிவு | வாக்கு % | எதிர்க்கட்சி வேட்பாளர் | எதிர்க்கட்சி | எதிர்க்கட்சி வாக்கு % |
---|---|---|---|---|---|---|---|
2024 | திருச்சிராப்பள்ளி | மதிமுக | வெற்றி | 51.35 | பி. கருப்பையா | அதிமுக | 21.7 |
இவர் "இந்திய புகையிலை குழுமம்" என்னும் நிறுவனத்தில் பங்குத்தொகை வைத்திருக்கிறார்.[14] இந்த பங்குத்தொகை விவகாரம் மதிமுகவின் எதிர்த்தரப்புக் கட்சிக்காரர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது.[15][16] மேலும் இவர் வீ இரியாலிட்டி (V Realty) தனியார் வரையறுக்கப்பட்டது என்ற நிறுவனத்துக்கு இயக்குநராகவும் உள்ளார்.[17]