துர்க் ஷாஹிக்கள் அல்லது காபூல் ஷாஹிக்கள் (Turk Shahis or Kabul Shahis) என்பது மேற்கு துருக்கியில் இருந்த ஓர் வம்சமாகும். அல்லது கலப்பு மேற்கு துர்க் - ஹெப்தலைட் வம்சாவளியாகும். இது பொ.ச. 7 முதல் 9 ஆம் நூற்றாண்டுகளில் காபூல் மற்றும் கபீசாவிலிருந்துகாந்தாரம் வரை ஆட்சி செய்தது. [1] பொ.ச 560களிலிருந்து, மேற்கு துருக்கியர்கள் படிப்படியாக திரான்சாக்சியானாவிலிருந்து தென்கிழக்கு நோக்கி விரிவடைந்து, பாக்திரியா மற்றும் இந்து குஷ் பிராந்தியத்தை ஆக்கிரமித்து, பெரும்பாலும் சுதந்திரமான அரசியல்களை உருவாக்கினர். [2] துர்க் ஷாஹிக்கள் அண்டை நாடான தோக்கரித்தானின் மேற்கு துர்க் யப்குசின் அரசியல் விரிவாக்கமாகவும் இது இருக்கலாம். இந்து-குஷ் பிராந்தியத்தில், அவர்கள் நெசக் ஹூணர்களுக்கு மாற்றாக வந்தனர் - பாக்திரிய ஆட்சியாளர்களின் கடைசி வம்சம் சியோனைட் மற்றும் / அல்லது ஹுண மக்களிடையே தோன்றியது (இவர்களை சில சமயங்களில் கிழக்கு ஐரோப்பா மீது படையெடுத்த "ஹூணர்கள்" என்றும் குறிப்பிடப்படுகிறது).
காபுலிஸ்தான் பகுதி துர்க் ஷாஹி களத்தின் மையப்பகுதியாக இருந்தது. இதில் சில நேரங்களில் சபுலித்தான் மற்றும் காந்தாரம் ஆகியவையும் அடங்கிய பகுதியாக இருந்தது. [3]
ராசிதீன் கலிபாக்களின் முஸ்லிம் படைகளால் சாசானியப் பேரரசு ஏற்கனவே அழிக்கப்பட்டிருந்த நேரத்தில் துர்க் ஷாஹிகள் உருவாகினர். துருக்கிய ஷாஹிகள் அப்பாசியக் கலிபாவின் முஸ்லீம் படைகளின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை 200 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்த்தனர். அவர்கள் பொ.ச. 9 ஆம் நூற்றாண்டில் பாரசீக சாபரித்துகளிடம் வீழும் வரை இந்தியாவில்முஸ்லீம் வெற்றிகளை திறம்பட தடுத்தனர். துருக்கிய கசனாவித்துகள் இறுதியாக வீழ்ச்சியடைந்து வரும் இந்து ஷாகிகள் மற்றும் குர்ஜ்ஜாராக்களை வென்ற பிறகு இந்தியாவுக்குள் நுழைந்தனர். [4] முஸ்லிம் விரிவாக்கத்திற்கு எதிராக துர்க் ஷாஹிகளின் நீண்டகால எதிர்ப்பு இந்திய கலாச்சாரம் மற்றும் இந்து மதத்தைப் பாதுகாக்க பங்களித்திருக்கலாம்,
கிபி 625 முதல், துருக்கியர்கள் நெசாக்கின் ஹூணப் பழங்குடியினரை படிப்படியாக இடம்பெயர வைத்தனர். இது அல்கான் ஹுணர்களையும் உள்ளடக்கியது. முதலில் சபுலிஸ்தானிலும் (காசுனியின் பகுதி) பின்னர் காபூலிஸ்தானிலும் (காபூலின் பகுதி) மற்றும் காந்தாரம் முதல் சிந்து ஆறு வரை இருந்தது. கி.பி 629 இல் கபிசிக்கு வருகை தந்த சீனப் பயணி சுவான்சாங், "... துருக்கியர்கள் சபுலித்தானுக்கும் கபிசிக்கும் இடையிலான மலைப் பகுதியில் வசித்து வந்தனர்" என்று குறிப்பிட்டுள்ளார். [5] ரு நூற்றாண்டுக்குப் பின்னர் 723-729ல் இப்பகுதியைப் பார்வையிட்ட கொரிய பௌத்தப் பயணியான 'ஹுய் சாவோ' என்பவர் காந்தாரம், கபிசா மற்றும் சபுலிஸத்தான் பகுதிகள் துருக்கிய ஆட்சியின் கீழ் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
துர்க் ஷாஹிகளின் கீழ் கலை (பொ.ச. 7-8 ஆம் நூற்றாண்டு)
பொ.ச. 7-8 ஆம் நூற்றாண்டுகளில் துருக்கிய ஷாஹிகளால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒப்பீட்டளவில் உயர்ந்த கலை நடவடிக்கைகள் இருந்தது. இது சாசானிய கலாச்சார பாரம்பரியத்தின் விளைவாகவோ அல்லது பௌத்த கலையின் தொடர்ச்சியான வளர்ச்சியின் விளைவாகவோ, சாத்தியமான ஹெப்தலைட் செல்வாக்கின் மூலமாகவோ இருக்கலாம். [6] குறிப்பாக பாண்டுகிஸ்தானின் கலை, 7 ஆம் நூற்றாண்டில் தேதியிடப்படுள்ளது. "மேற்கு துருக்கியர்களின் காலத்திற்கு" சொந்தமானது என்றும் கருதப்படுகிறது. [7]ஆப்கானித்தானில் இருந்த மேற்கு துருக்கியர்கள் பொதுவாக கி.பி 7 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் காந்தார, பௌத்த கலையின் முக்கிய மறுமலர்ச்சியுடன் தொடர்புடையவர்கள். குறிப்பாக பாமியான், காபூலுக்கு அருகிலுள்ள மெஸ் ஐநாக், காசுனியில் உள்ள தபா சர்தார் அல்லது தெப் நரேஞ்ச் போன்ற முக்கிய புதிய புத்த தளங்களுடன், இது குறைந்தது 9 ஆம் நூற்றாண்டு வரை செயலில் இருந்தது.
துர்க் ஷாஹிகள் பௌத்த மதத்தை ஆதரித்தவர்கள் எனக் கூறப்படுகிறது. பொதுவாக அவர்கள் பௌத்தர்களாக முன்நிறுத்தப்படுகின்றனர். [8][9] கொரியன யாத்ரீகர் ஹுய் சாவோ கிபி 726 இல் கபிசாவின் துருக்கிய ஆட்சியாளர்கள் மும்மணிகளைப் பின்பற்றி பல புத்த கோவில்களை நிறுவியதாக சீன மொழியில் பதிவு செய்துள்ளார்.
சீனப்பயணி வுலோங் கி.பி 753 இல் காந்தாரத்துக்கு வந்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, காந்தாரம் கபிசி நாட்டின் குளிர்காலத்தில் கிழக்கு தலைநகராகவும், கோடையில் கபிசியிலும் தலைநகரைக் கொண்டிருந்தது. பொ.ச. 756 முதல் 760 வரை அவர் பார்வையிட்ட காஷ்மீரில், பௌத்த கோவில்கள் துருக் மன்னர்களால் அர்ப்பணிக்கப்பட்டவை என்று கூறியுள்ளார். [8] துர்க் ஷாஹிகளின் கீழ் குறைந்த அளவிற்கு பிராமணியமும் தழைத்தோங்கியதாகத் தெரிகிறது. பல்வேறு கலைப் படைப்புகளும் அவர்களின் காலத்திற்கு காரணமாக இருந்தன. [10]
↑"The period from 560 CE onwards would be that of the Western Turks, although it is not clear how and foremost when they gained power over Bactria and the Hindukush-region. Minoru Inaba states that “gradually having extended their power, they came to be independent ...”" in Vondrovec, Klaus (in en). Coinage of the Nezak. p. 173. https://www.academia.edu/880242/Coinage_of_the_Nezak.