துறவற சபை

துறவற சபை என்பது கத்தோலிக்க திருச்சபையில் அர்ப்பணவாழ்வுச் சபைகளில் ஒருவகை ஆகும். இவ்வகை சபையின் உறுப்பினர்கள், தங்கள் சபையின் தனிச் சட்டத்திற்கேற்ப, பகிரங்க வார்த்தைப்பாடுகள் எடுக்கின்றனர்; மற்றும் சகோதரக் கூட்டுவாழ்வு நடத்துகின்றனர்;[1]. இவ்வகை அர்ப்பணவாழ்வு தனியாகவோ அல்லது ஒரு சபையோடு சேர்ந்தோ வாழலாம் என்பது குறிக்கத்தக்கது. கத்தோலிக்க திருச்சபையில் அர்ப்பணவாழ்வுச் சபைகளின் மற்றுமொரு வகை உலகுசார் சபைகள் என்பது குறிக்கத்தக்கது.[2] மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்கள் துறவற சபைகளை ஒத்திருந்தாலும் அவற்றின் உறுப்பினர்கள் துறவற வார்த்தைப்பாடுகள் அளிப்பதில்லை.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Code of Canon Law, canon 607 §2
  2. Code of Canon Law, canon 710
  3. Code of Canon Law, canon 731 §1