தனிநபர் தகவல் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழு பெயர் | சமித துலான் கொடித்துவக்கு | ||||||||||||||||
பிறப்பு | 10 சூலை 1990 தெனியாய, தென்மாகாணம், இலங்கை | ||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||
நாடு | இலங்கை | ||||||||||||||||
விளையாட்டு | இணை ஒலிம்பிக் தடகளம் | ||||||||||||||||
மாற்றுத்திறன் வகைப்பாடு | F64 | ||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | |||||||||||||||||
மாற்றுத் திறனாளர் இறுதி | 2020 தோக்கியோ | ||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
சமித துலான் எனவும் அறியப்படும் சமித துலான் கொடித்துவக்கு (பிறப்பு 10 சூலை 1990) என்பவர் இலங்கையின் இணை ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீரராவார்.[1][2] இவர் 2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பில் முதன்முதலில் பங்கேற்றார்.[2][3]
சமித துலான், இலங்கையின் தென்மாகாணத்திலுள்ள தெனியாயவில் பிறந்து வளர்ந்தார். இவர் தனது துவக்கக் கல்வியை தெனியாய மத்திய கல்லூரியிலும் இரண்டாம் நிலைக் கல்வியை ராகுல கல்லூரியிலும் தொடர்ந்தார்.[4]
இவர் ஒரு விசையுந்து ஈருருளி விபத்தின்போது தனது வலது காலில் உபாதைக்குள்ளானார். 2017ம் ஆண்டிலிருந்து இவர் மாற்றுத்திறனாளர் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.[4] இவர் இலங்கை இராணுவக் காவல்துறையில் கோப்ரலாகப் பணிபுரிவதோடு இராணுவக் காவல்துறை விளையாட்டுக் கழகம் சார்பில் போட்டிகளில் பங்கேற்கிறார்.[5]
இவர் 2019ம் ஆண்டில் துபாயில் நடைபெற்ற உலக இணைத் தடகள வாகையர் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் F44 பிரிவில் நான்காம் இடம் பெற்றதன் மூலம் 2020 கோடைகால இணை ஒலிம்பிக் போட்டிகளில் நேரடியாகப் பங்கேற்கும் தகுதி பெற்றார்.[6]
இவர் 2020 தோக்கியோ இணை ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் F64 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[7][8] இதன்மூலம், 2020 கோடைக்கால இணை ஒலிம்பிக்கில் இலங்கைக்கு இரண்டாவது பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்ததோடு, ஆகத்து 30, 2021 எனும் ஒரே நாளில் இலங்கை இரண்டு பதக்கங்களை வென்றது.[9][10]