துலிப் சித்திக்

துலிப் ரிசுவானா சித்திக் (Tulip Rizwana Siddiq ) (பிறப்பு 16 செப்டம்பர் 1982) இவர் ஓர் பிரிட்டிசு தொழிலாளர் கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் 2015 முதல் ஆம்ப்ஸ்டெட் மற்றும் கில்பர்னுக்கான நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவர் முன்பு 2010 முதல் 2014 வரை ரீஜண்ட்ஸ் பூங்காவிற்கான கேம்டன் லண்டன் பெருநகர உறுப்பினராக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

இவர் பொருளாதாரப் பேராசிரியர் சபீக் சித்திக்,[1][2][3][4] மற்றும் சேக் ரகானா, ஆகியோரின் மகள் ஆவார். சபிக் சித்திக் முனைவர் பட்டத்திற்கு படித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் சந்தித்தனர் [5] 1980 இல் கில்பர்னில் திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு, ரத்வான் பாபி முஜிப் என்ற ஒரு மூத்த சகோதரர்,[6][7][8] ரூபி என்ற ஒரு தங்கை உள்ளனர்.[9] இவர் இலண்டனின் செயின்ட் ஹெலியரில் உள்ள செயின்ட் ஹெலியர் மருத்துவமனையில் [10] பிறந்தார். இவருக்கு 15 வயதாக இருந்தபோது, குடும்பம் ஆம்ப்ஸ்டெட்டுக்கு குடிபெயர்ந்தது. இவர் ஒரு முஸ்லீமாக வளர்க்கப்பட்டார். மேலும் இவரது "குடும்பம் பல கலாச்சார பிரிட்டனை ஏற்றுக்கொண்டது" என்று கூறியுள்ளார்.[11] ஒரு குழந்தையாக, இவர் நெல்சன் மண்டேலா, பில் கிளிண்டன் மற்றும் அன்னை தெரசா ஆகியோரைச் சந்தித்துள்ளார்.[12] இவரது குடும்பத்தினர் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டனர் . [13]

இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டமும் பின்னர் லண்டன் கிங்ஸ் கல்லூரியில் முதுகலை பட்டமும் முடிப்பதற்கு முன்பு ஆம்ப்ஸ்டெட்டில் உள்ள ராயல் பள்ளியில் பயின்றார். செப்டம்பர் 2011 இல், இவர் அரசியல், கொள்கை மற்றும் அரசாங்கத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டம் முடித்தார். [14][15][16][17]

இவரது தாய்வழி தாத்தா சேக் முஜிபுர் ரகுமான், வங்காளதேசத்தில் முதல் குடியரசுத்தலைவர் ஆவார். இவரது தாயின் மூத்த சகோதரி வங்கதேச பிரதமர் சேக் அசீனா ஆவார் . 1975 ஆம் ஆண்டில், வங்காளாதேச இராணுவ வீரர்கள் வங்காளதேசத்தில் உள்ள இவரது தாயார் வீட்டிற்குள் நுழைந்து இவரது தாத்தா சேக் முஜிபுர் ரகுமானை அவரது மூன்று மகன்கள், குடும்பத்தின் 16 உறுப்பினர்களுடன் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில் படுகொலை செய்தனர் . இவரது தாயின் மூத்த சகோதரியும், இவரது தாயும் ஜெர்மனிக்கு சென்றிருந்ததால் உயிர் தப்பினர்.

நாடாளுமன்ற வாழ்க்கை

[தொகு]

2015 பொதுத் தேர்தலில், சித்திக் 23,977 வாக்குகளுடன் ஆம்ப்ஸ்டெட் மற்றும் கில்பர்ன் தொகுதியை வென்றார். 67.3% வாக்குகளைப் பெற்றார்.[18][19][20] சூன் 2015 இல், சித்திக் ஆண்டிசெமிட்டிசத்திற்கு எதிரான அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[21][22] இவர் பெண்கள் மற்றும் சமத்துவ தேர்வுக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.[23] அதே மாதத்தில், தொழிலாளர் தலைமைத் தேர்தலில் ஜெர்மி கோர்பினை வேட்பாளராக நியமித்த 36 தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார், பின்னர் இவர் ஆண்டி பர்ன்ஹாமை ஆதரித்தார்.[24]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

இவர் ஒரு முஸ்லீமாக இருந்தாலும் [25] வர் "மதத்தை விட கலாச்சாரம் முக்கியமானது" என்று கூறினார்.[12] 2013 ஆம் ஆண்டில்,[26] இவர் கிறிஸ்டியன் வில்லியம் செயின்ட் ஜான் பெர்சி என்பவரை மணந்தார். ஜான் (பிறப்பு 1984),[27] கேம்பிரிச்சில் படித்தவர்.[28] நிறுவன இயக்குனராகவும்,[29] பிரிட்டிசு அரசு சேவை பின்னணி கொண்ட மூலோபாய ஆலோசகர் ஆவார்.

இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.[30][31][32][33][34] இவர் சனவரி 2019 இல் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.[35]

குறிப்புகள்

[தொகு]
  1. "Rezwana Siddiq Tulip, among the 100 powerful British- Bangladeshis in UK". Bangladesh: The Independent. 23 January 2013. http://www.theindependentbd.com/index.php?option=com_content&view=article&id=152754:rezwana-siddiq-tulip-among-the-100-powerful-british-bangladeshis-in-uk&catid=95:national&Itemid=141. பார்த்த நாள்: 1 July 2012. 
  2. Pasha, Syed Nahas (19 June 2013). "Tulip Weds". London: Bdnews24.com. http://www.bdnews24.com/bangladesh/2013/06/19/tulip-weds. பார்த்த நாள்: 1 December 2013. 
  3. Neicho, Josh (25 July 2013). "Tulip gets Labour Party nomination in UK". Dhaka: Dhaka Courier. http://www.dhakacourier.com.bd/?p=12853. பார்த்த நாள்: 1 December 2013. 
  4. Neicho, Josh (4 October 2012). "House of Straw... who's who in Labour's new generation". London Evening Standard (London). https://www.standard.co.uk/lifestyle/london-life/house-of-straw-whos-who-in-labours-new-generation-8196861.html. பார்த்த நாள்: 5 February 2013. 
  5. Urwin, Rosamund (15 April 2015). "Tulip Siddiq: 'Go to as many strip clubs as you want — I really don't care. Are you serving our people?'". London Evening Standard (London). https://www.standard.co.uk/lifestyle/london-life/tulip-siddiq-go-to-as-many-strip-clubs-as-you-want--i-really-dont-care-are-you-serving-our-people-10177760.html. பார்த்த நாள்: 1 May 2015. 
  6. Mahbub, Sumon (19 April 2015). "Hasina listens to Tulip's maiden speech in UK Parliament". London: Bdnews24.com. http://www.bdnews24.com/bangladesh/2015/06/16/hasina-listens-to-tulips-maiden-speech-in-uk-parliament. பார்த்த நாள்: 1 May 2015. 
  7. Hensher, Philip (19 July 2013). "Tulip Siddiq: A heritage in Bangadeshi politics, a future in British?". The Independent. https://www.independent.co.uk/voices/comment/tulip-siddiq-a-heritage-in-bangadeshi-politics-a-future-in-british-8720884.html. பார்த்த நாள்: 1 December 2013. 
  8. "Tulip Siddiq on her first visit to Bangladesh as a British MP". Bdnews24.com. 21 December 2015. http://www.bdnews24.com/bangladesh/2015/12/21/tulip-siddiq-on-her-first-visit-to-bangladesh-as-a-british-mp. பார்த்த நாள்: 1 January 2016. 
  9. Khalidi, Imrose (8 May 2015). "Tulip, Rupa, Rushanara win". Bangladesh: Bdnews24.com. http://www.bdnews24.com/bangladesh/2015/05/08/tulip-rupa-rushanara-win. பார்த்த நாள்: 8 May 2015. 
  10. Bennett, Owen (20 October 2015). "Tulip Siddiq On Glenda Jackson, Why Obama Could Only Fall From The Pedestal, And Why Work Never Stops Even At Zumba Class". The Huffington Post. http://www.huffingtonpost.co.uk/2015/10/19/tulip-siddiq-glenda-jackson-springsteen_n_8330872.html. பார்த்த நாள்: 1 November 2015. 
  11. Siddiq, Tulip (4 May 2016). "The reality of being a Muslim MP? Smear campaigns outside mosques and being told to change my name". The Independent. https://www.independent.co.uk/voices/the-reality-of-being-a-muslim-mp-smear-campaigns-outside-mosques-and-being-told-to-change-my-name-a7013136.html. பார்த்த நாள்: 1 April 2017. 
  12. 12.0 12.1 Lamden, Tim (26 January 2015). "Labour's Tulip Siddiq: 'Glenda Jackson is a celebrity, I can't compete with two Oscars'". Hampstead and Highgate: Ham & High இம் மூலத்தில் இருந்து 23 ஜூன் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180623033003/http://www.hamhigh.co.uk/seasonal/election/labour-s-tulip-siddiq-glenda-jackson-is-a-celebrity-i-can-t-compete-with-two-oscars-1-3929031. பார்த்த நாள்: 16 July 2018. 
  13. Usborne, Simon (5 April 2015). "Tulip Siddiq: Fighting for Britain's most marginal seat in the shadow of tragedy". The Independent. https://www.independent.co.uk/news/uk/politics/tulip-siddiq-the-north-london-labour-candidate-trying-to-improve-the-woeful-diversity-of-westminster-10157378.html. பார்த்த நாள்: 1 May 2015. 
  14. "Labour's Tulip Siddiq: 'Glenda Jackson is a celebrity, I can't compete with two Oscars'". Ham & High இம் மூலத்தில் இருந்து 23 ஜூன் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180623033003/http://www.hamhigh.co.uk/seasonal/election/labour-s-tulip-siddiq-glenda-jackson-is-a-celebrity-i-can-t-compete-with-two-oscars-1-3929031. பார்த்த நாள்: 16 July 2018. 
  15. "Tulip Siddiq: Fighting for Britain's most marginal seat in the shadow of tragedy". https://www.independent.co.uk/news/uk/politics/tulip-siddiq-the-north-london-labour-candidate-trying-to-improve-the-woeful-diversity-of-westminster-10157378.html. பார்த்த நாள்: 1 May 2015. 
  16. British Bangladeshi Who's Who (PDF). British Bangla Media Group. பார்க்கப்பட்ட நாள் 18 September 2011.
  17. "introducing Tulip Siddiq: your Labour voice in Fortune Green" (PDF). Tulip Siddiq. 2008. பார்க்கப்பட்ட நாள் 1 November 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  18. "New British MP Tulip Siddiq says she learned politics from aunt Sheikh Hasina". Bdnews24.com. 8 May 2015 இம் மூலத்தில் இருந்து 18 மே 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150518091044/http://bdnews24.com/bangladesh/2015/05/08/ive-learned-politics-from-my-aunt-sheikh-hasina-tulip-siddiq. பார்த்த நாள்: 8 May 2015. 
  19. "Tulip Siddiq: 'Hampstead and Kilburn is my home and I'm so proud to represent it'". Ham & High. 8 May 2015 இம் மூலத்தில் இருந்து 10 மே 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150510200738/http://www.hamhigh.co.uk/home/election-2015/tulip_siddiq_hampstead_and_kilburn_is_my_home_and_i_m_so_proud_to_represent_it_1_4065675. பார்த்த நாள்: 8 May 2015. 
  20. "Hampstead and Kilburn general election 2015: Polling day in England's most marginal seat". Kilburn Times. 7 May 2015 இம் மூலத்தில் இருந்து 18 மே 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150518094850/http://www.kilburntimes.co.uk/home/election-2015/hampstead_and_kilburn_general_election_2015_polling_day_in_england_s_most_marginal_seat_1_4064112. பார்த்த நாள்: 8 May 2015. 
  21. "Hampstead and Kilburn MP Tulip Siddiq praised for early role tackling anti-Semitism". Ham & High. 9 June 2015 இம் மூலத்தில் இருந்து 1 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150701083926/http://www.hamhigh.co.uk/news/politics/hampstead_and_kilburn_mp_tulip_siddiq_praised_for_early_role_tackling_anti_semitism_1_4105621. பார்த்த நாள்: 1 July 2015. 
  22. "We've heard your anxieties loud and clear". 24 April 2017. https://www.thejc.com/comment/comment/wes-streeting-and-tulip-siddiq-1.436660. பார்த்த நாள்: 24 April 2017. 
  23. "Tulip Siddiq MP". UK Parliament. பார்க்கப்பட்ட நாள் 12 July 2015.
  24. "Labour's rising star Tulip Siddiq on why maternity leave shouldn't be a problem in politics". 18 January 2016. https://www.standard.co.uk/lifestyle/london-life/why-labours-rising-star-tulip-siddiq-is-taking-maternity-leave-a3159106.html. பார்த்த நாள்: 18 January 2016. 
  25. Neild, Barry (15 January 2014). "UK vote could create cross-border dynasty". Qatar: Al Jazeera. http://www.aljazeera.com/indepth/features/2014/01/uk-vote-could-create-cross-border-dynasty-2014113112342206325.html. பார்த்த நாள்: 19 March 2014. 
  26. Karim, Rezaul (4 July 2013). "On official trip, for niece's wedding – PM flies to London today en route to Belarus". The Daily Star (Bangladesh). http://www.thedailystar.net/beta2/news/on-official-trip-for-nieces-wedding/. பார்த்த நாள்: 1 December 2013. 
  27. Roy, Amit (4 August 2013). "Tulip gets the ticket". Telegraph India (India). http://www.telegraphindia.com/1130804/jsp/7days/17192386.jsp. பார்த்த நாள்: 1 December 2013. 
  28. "He speaks Chinese and is learning Bangla". Bangladesh: The Bangladesh Chronicle. 8 July 2013 இம் மூலத்தில் இருந்து 3 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131203000259/http://www.bangladeshchronicle.net/index.php/2013/07/he-speaks-chinese-and-is-learning-bangla/. பார்த்த நாள்: 1 December 2013. 
  29. "B'desh PM's niece on verge of becoming British MP". The Tribune (India). 20 April 2015. http://www.tribuneindia.com/news/world/b-desh-pm-s-niece-on-verge-of-becoming-british-mp/69775.html. பார்த்த நாள்: 1 May 2015. 
  30. Roberts, Rachel (9 April 2016). "Hampstead and Kilburn MP Tulip Siddiq gives birth to her first baby". Hampstead and Highgate: Ham & High இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170402082413/http://www.hamhigh.co.uk/news/hampstead_and_kilburn_mp_tulip_siddiq_gives_birth_to_her_first_baby_1_4488924. பார்த்த நாள்: 1 April 2017. 
  31. Osley, Richard (9 April 2016). "Hampstead and Kilburn MP Tulip Siddiq gives birth to first child". Camden: Camden New Journal இம் மூலத்தில் இருந்து 12 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160412054734/http://www.camdennewjournal.com/azalea-percy. பார்த்த நாள்: 1 April 2017. 
  32. "Tulip Siddiq gives birth to a baby girl". Bdnews24.com. 9 April 2016. http://www.bdnews24.com/politics/2016/04/09/tulip-siddiq-gives-birth-to-a-baby-girl. பார்த்த நாள்: 1 April 2017. 
  33. "Tulip Siddiq blessed with daughter". Prothom Alo (Dhaka). 9 April 2016. http://www.en.prothom-alo.com/bangladesh/news/101137/Tulip-Siddiq-blessed-with-daughter. பார்த்த நாள்: 1 April 2017. 
  34. "Hasina becomes great-aunt". The Daily Star (Bangladesh). 10 April 2016. http://www.thedailystar.net/city/tulip-gives-birth-girl-1206841. பார்த்த நாள்: 1 April 2017. 
  35. "MP who delayed birth of son accuses Tories over proxy vote delay". The Guardian. 21 January 2019. பார்க்கப்பட்ட நாள் 21 January 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]