துளசிமதி முருகேசன் (Thulasimathi Murugesan) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓர் இணை இறகுப்பந்து விளையாட்டு வீராங்கனையாவார். 2022 ஆம் ஆண்டு சீனாவின் காங்சோவில் நடைபெற்ற இணை ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [1] இணை இறகுப்பந்து போட்டிகளில், கீழ் மூட்டுகள் குறைபாடு வகையினருக்கான போட்டிகளான எசுஎல்3-எசுயூ5 போட்டிகளிலும் மற்றும் மேல்மூட்டு குறைபாட்டு வகையினருக்கான போட்டிகளில் பங்கேற்று மூன்று பதக்கங்களை வென்றார்.
2023 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் துளசிமதி 5 ஆவது பன்னாட்டு பாசா துபாய் இணை இறகுப்பந்து போட்டியில் மானசி இயோசியுடன் சேர்ந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார் [2] பின்னர் கலப்பு இரட்டையர் எசுஎல்3 மற்றும் எசுயூ5 வகை போட்டி ஆகியவற்றில் நித்தேசு குமாருடன் இணைந்து மற்றொரு வெண்கலப் பதக்கம் வென்றார். மானசியுடன் இணைந்து, உலக இணை-இறகுப்பந்து இரட்டையர் தரவரிசையில் இவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். [3] ஐதராபாத்து நகரத்தில் பயிற்சியாளர் கோபிசந்திடம் துளசிமதி பயிற்சி பெற்றார். [4]
காங்சூவில் நடந்த 4 ஆவது ஆசிய இணை விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை துளசிமதி வென்றார். [5] 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதியன்று கலப்பு இரட்டையர் எசுஎல்3-எசுயூ5 வகையினர் இரட்டையர் போட்டியில் நித்தேசு குமாருடன் அணியாக விளையாடி வெண்கலப் பதக்கம் வென்றார். அக்டோபர் மாதம் 27 ஆம் தேதியன்று பெண்கள் இரட்டையர் எசுஎல்3-எசுயூ5 வகையினர் போட்டியில் மானசி இயோசியுடன் இணைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார் தனிப்பட்ட பெண்கள் ஒற்றையர் எசுயூ5 வகையினருக்கான போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முதலிடத்தைப் பிடித்தார். [6] [7]
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)