துவாரான் (P170) மலேசிய மக்களவைத் தொகுதி சபா | |
---|---|
Tuaran (P170) Federal Constituency in Sabah | |
துவாரான் மக்களவைத் தொகுதி (P170 Tuaran) | |
மாவட்டம் | துவாரான் மாவட்டம் கோத்தா கினபாலு மாவட்டம்; கோத்தா பெலுட் மாவட்டம் மேற்கு கரை பிரிவு |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 83,419 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | துவாரான் மக்களவைத் தொகுதி |
முக்கிய நகரங்கள் | துவாரான் |
பரப்பளவு | 1,126 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1966 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | வில்பிரட் மேடியஸ் தாங்காவ் (Wilfred Madius Tangau) |
மக்கள் தொகை | 134,976 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1969 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
துவாரான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tuaran; ஆங்கிலம்: Tuaran Federal Constituency; சீனம்: 斗亚兰联邦选区) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் மேற்கு கரை பிரிவு, துவாரான் மாவட்டம்; கோத்தா கினபாலு மாவட்டம்; கோத்தா பெலுட் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P170) ஆகும்.[5]
துவாரான் மக்களவைத் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1969-ஆம் ஆண்டில் இருந்து துவாரான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]
துவாரான் மாவட்டம் என்பது சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் துவாரான் நகரம் (Tuaran Town).[7]
சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களில் துவாரான் மாவட்டமும் ஒன்றாகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது.[8]
துவாரான் எனும் பெயரின் தோற்றம் ஓரளவுக்கு இன்னும் அறியப் படாமல் உள்ளது. இருப்பினும் பிரித்தானியர்களின் வருகைக்கு முன்பே இருந்து துவாரான் நகரில் ஒரு குடியேற்றம் இருந்துள்ளது. 1800-ஆம் ஆண்டுகளில் இசுடாம்போர்டு இராஃபிள்சு துவாரான் எனும் பெயரைப் பயன்படுத்தி உள்ளார்.[9][10]
துவாரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
துவாரான் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
1969-1971 | நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[12][13] | |||
3-ஆவது மக்களவை | P108 | 1971-1973 | பூஜா கும்பிலை (Buja Gumbilai) |
அசுனோ |
1973-1974 | பாரிசான் நேசனல் (அசுனோ) | |||
4-ஆவது மக்களவை | P119 | 1974-1978 | ||
5-ஆவது மக்களவை | 1978-1982 | ஜேம்ஸ் பீட்டர் ஓங்கிலி (James Peter Ongkili) |
பாரிசான் நேசனல் (பெர்ஜாயா) | |
6-ஆவது மக்களவை | 1982-1986 | |||
7-ஆவது மக்களவை | P137 | 1986-1990 | கலாக்கா உந்தோல் (Kalakau Untol) |
பாரிசான் நேசனல் (அசுனோ) |
8-ஆவது மக்களவை | 1990-1995 | மொங்கோ ஓரோ (Monggoh Orow) |
காகாசான் ராக்யாட் (ஐக்கிய சபா கட்சி) | |
9-ஆவது மக்களவை | P149 | 1995-1999 | யூனோப் எட்வர்ட் மரிங்கிங் (Yunof Edward Maringking) | |
10-ஆவது மக்களவை | 1999-2004 | வில்பிரட் மேடியஸ் தாங்காவ் (Wilfred Madius Tangau) |
பாரிசான் நேசனல் (உப்கோ) | |
11-ஆவது மக்களவை | P170 | 2004-2008 | ||
12-ஆவது மக்களவை | 2008-2011 | வில்பிரட் பம்பரரிங் (Wilfred Bumburing) | ||
2011-2013 | சுயேச்சை | |||
13-ஆவது மக்களவை | 2013-2018 | வில்பிரட் மேடியஸ் தாங்காவ் (Wilfred Madius Tangau) |
பாரிசான் நேசனல் (உப்கோ) | |
14-ஆவது மக்களவை | 2018 | |||
2018-2021 | உப்கோ | |||
2021–2022 | பாக்காத்தான் அரப்பான் (உப்கோ) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
வில்பிரட் மேடியஸ் தாங்காவ் (Wilfred Madius Tangau) | பாக்காத்தான் அரப்பான் (PH) | 24,943 | 42.84 | 8.77 | |
சோனிஸ்டன் பேங்குவாய் (Joniston Bangkuai) | சபா மக்கள் கூட்டணி (GRS) | 24,710 | 42.44 | 42.44 | |
ஜோ-அன்னா சூ என்லி சீஸ் (Jo-Anna Sue Henley Rampas) | சபா பாரம்பரிய கட்சி (Heritage) | 5,728 | 9.84 | 9.84 | |
நூர்தைப் சுகைலி (Noortaip Suhaili) | சுயேச்சை (Independent) | 2,008 | 3.45 | 3.49 | |
முமினின் நோர்பின்சா (Muminin Norbinsha) | தாயக இயக்கம் (GTA) | 445 | 0.76 | 0.76 | |
போபி லேவாட் (Boby Lewat) | சுயேச்சை (Independent) | 393 | 0.67 | 0.67 | |
மொத்தம் | 58,227 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 58,227 | 98.49 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 895 | 1.51 | |||
மொத்த வாக்குகள் | 59,122 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 70.87 | 11.55 ▼ | |||
Majority | 233 | 0.4 | 17.07 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [14] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)