தூங்காபி சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் | |||||||||||||
போர்டிகோ பூங்கா | |||||||||||||
மக்கள் தொகை: | 14337 | ||||||||||||
அமைப்பு: | 1792 | ||||||||||||
அஞ்சல் குறியீடு: | 2146 | ||||||||||||
ஆள்கூறுகள்: | 33°47′10″S 150°57′23″E / 33.78611°S 150.95639°E | ||||||||||||
பரப்பளவு: | 23.453 கிமீ² (9.1 சது மைல்) | ||||||||||||
உள்ளூராட்சிகள்: |
| ||||||||||||
பிரதேசங்கள்: | பரந்த மேற்கு சிட்னி | ||||||||||||
மாநில மாவட்டம்: |
| ||||||||||||
நடுவண் தொகுதி: |
| ||||||||||||
|
தூங்காபி (Toongabbie) ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னியில் உள்ள ஒரு பழமையான புறநகர்ப் பகுதியாகும். இது சிட்னி நகரிலிருந்து 30 கிலோமீட்டர் மேற்காக அமைந்துள்ளது. பரந்த மேற்கு சிட்னி பிராந்தியத்தில் அமைந்துள்ள தூங்காபி, பரமட்டா, பிளாக்டவுண் மற்றும் கம்பர்லான்ட் உள்ளூர் அரசாங்க பகுதிகளுக்கிடையில் பிரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களால் இது பெரும்பாலும் "டூனி" மற்றும் "டூங்கா பே" என்று அழைக்கப்படுகிறது.[1][2]
தூங்காபி புறநகர் பகுதிக்கு வடக்காக வின்ஸ்டன் ஹில்லும் கிழக்காக பழைய தூங்காபியும் தென் கிழக்காக பெண்டில் ஹில்லும் தெற்காக கிர்ராவினும், தென் மேற்காக புரொஸ்பெக்ட்டும் மேற்காக செவன் ஹில்ஸும் அமைந்துள்ளன.
தூங்காபி என்ற பெயர் ஒரு தொல்குடியின சொல்லிலிருந்தே உருவாகியிருக்கிறது. இதற்கு நீருக்கு அருகே உள்ள இடம் அல்லது நீர் சந்திக்கும் இடம் என்று பொருள். ஆளுநர் ஆர்தர் பிலிப் உள்ளூர் பழங்குடி மக்களிடம் அவர்கள் அந்த இடத்தை எவ்வாறு அழைத்தார்கள் என்று கேட்டு ஜூன் 1792 இல் இந்த பெயரிடப்பட்டது.
1788 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய குடியேற்றம் தொடங்கிய பின்னர் அமைக்கப்பட்ட மூன்றாவது பிரதான குடியேற்றமாக (சிட்னி மற்றும் பரமட்டாவுக்குப் பிறகு) தூங்காபி குறிப்பிடப்படுகிறது. ஆனாலும் தூங்காபியில் அமைக்கப்பட்ட முதல் குடியேற்றம் தற்போது பழைய தூங்காபி என்று அழைக்கப்படும் பகுதியிலேயே அமைந்திருக்கிறது.
தூங்காபி தொடருந்து நிலையம் சிட்னி தொடருந்து வலையமைப்பின் வடக்கு கடற்கரை, வடக்கு மற்றும் மேற்கு தடத்தில் அமைந்துள்ளது. 1880 இல் திறக்கப்பட்ட இந்த நிலையம் 1955 இல் மின்மயமாக்கப்பட்டது.
தூங்காபி ரயில் நிலையத்திற்கு மேற்காக செவன் ஹில்ஸ் ரயில் நிலையமும் கிழக்காக பெண்டில் ஹில் ரயில் நிலையமும் அமைந்துள்ளன.
தூங்காபியினூடாக பிளாக்டவுன், பரமட்டா மற்றும் வெஸ்ட்மீட் ஆகிய இடங்களை இணைக்கும் பேரூந்து சேவைகளும் இயக்கப்படுகின்றன.
இதற்கு மேலதிகமாக டி-வே பேரூந்து சேவையும் தூங்காபியில் வழங்கப்படுகிறது.
2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தூங்காபியில் 14,337 பேர் வசித்து வந்தனர். அவர்களின் சராசரி வயது 35 ஆண்டுகளாக இருந்தது. இந்த மக்கள் தொகையில் 0-14 வயதுக்கிடைப்பட்ட குழந்தைகள் 20.4% ஆகவும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12.6% ஆகவும் இருந்தனர். இவர்களில் 47.6% மக்கள் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள். இதற்கு அடுத்தாதாக இந்தியா 14.5%, இலங்கை 6.8%, சீனா (எஸ்ஏஆர் மற்றும் தைவானை தவிர்த்து) 3.1%, பிலிப்பைன்ஸ் 2.5% மற்றும் நியூசிலாந்து 1.7% ஆகிய நாடுகளில் பிறந்தவர்கள் தூங்காபியில் வசித்து வந்தனர். இந்த கணக்கெடுப்பின் படி பொதுவான மதங்களாக கத்தோலிக்க மதம் 24.0%, இந்து மதம் 22.0%, மதம் இல்லை 13.8%, ஆங்கிலிகன் 9.4% மற்றும் குறிப்பிடப்படவில்லை 6.9% ஆக இருந்தது.[3]
தூங்காபி புறநகர் பகுதியில் பல பாடசாலைகள் அமைந்துள்ளன. இவற்றில் தூங்காபி பொது பள்ளி, தூங்காபி கிறிஸ்தவ பள்ளி மற்றும் மெற்றெல்லா சாலை பொது பள்ளி என்பன குறிப்பிடத்தக்கவை.
A series of boys-own adventures give way to upward mobility when, as "Tanny from Toonie [Toongabbie]", he wins entry to the high achieving Sydney Grammar School.
Colloquially known as 'Toonie', or 'Gabby' and occasionally is sometimes jocularly referred to as 'Toonga Bay'.
{{cite web}}
: Cite has empty unknown parameter: |dead-url=
(help)