தூண்டில் பறவைகள் என்ப து நீர்க்காகத்தினைக் கொண்டு மீன்பிடிக்கும் முறையாகும் (Cormorant fishing). நீர்க்காகம் என்னும் இப்பறவைகள் கூட்டம் கூட்டமாக வாழும். உலகெங்கும் இப்பறவைகள் பரவலாக காணப்படுகின்றன. இவை ஆகாயத்திலும் பறந்து செல்லும் அதேசமயம் நீரிலும் மூழ்கிச் சென்று மீன்களை வேட்டையாடும். இரண்டு நிமிடம் மூச்சு பிடித்து நீருக்குள்ளே இருக்கும். நீண்ட கழுத்து கொண்ட இப்பறவை, மிகுந்த பேராசை கொண்டது. இப்பறவையைக் கண்டால் மீனவர்களுக்கு எரிச்சல்தான். சிரமப்பட்டு பிடிக்கும் மீன்களை இப்பறவைகள் திருடித் தின்றுவிடுவதுதான் காரணம். இப்பறவைகளால் படகில் மீன்களை வைப்பது என்றால் மீனவர்களுக்குக் கவலை.
ஆனால் சீனா, ஜப்பான் மீனவர்கள் இப்பறவையைப் பிடித்து வைத்துக்கொண்டு இதன் மூலம் மீன் பிடிக்கின்றனர். இப்பறவையைக் கொண்டு கி.பி.960-லிருந்து பாரம்பரியமாக மீன்பிடிக்கின்றனர்.[1] இதன் நீண்ட கழுத்தில் ஒரு வளையத்தை மாட்டி அதை ஒரு சங்கிலியோடு இணைத்து கட்டிவிட்டு, காகத்தை நீரில் மீன்பிடிக்க விடுவார்கள். பறவையும் ஆர்வமாக நீரில் மீன்பிடிக்கும். ஆனால் மீனை விழுங்க இயலாது காரணம் கழுத்தில் உள்ள வளையம் இடம் கொடுக்காது. மீனவர்கள் அதன் வாயில் உள்ள மீனை எடுத்துக்கொண்டு பெயருக்கு ஒரு சிறிய மீனை அதற்கு இரையாகக் கொடுத்து மீண்டும் அதை மீன் பிடிக்க அனுப்புவர். இவ்விதமாக இப்பறவையைக் கொண்டு மீன்பிடிப்பர்.