தூவானத் தும்பிகள் | |
---|---|
இயக்கம் | பி.பத்மராசன் |
தயாரிப்பு | பி. ஸ்டான்லி |
கதை | பி.பத்மராசன் |
இசை | பி.பத்மராசன் |
நடிப்பு | மோகன் லால் சுமலதா பார்வதி செயராம் |
ஒளிப்பதிவு | அசயன் வின்சன்ட் செயனன் வின்சன்ட் |
படத்தொகுப்பு | பி.லால் வி.டி.விசயன் (இணை) |
கலையகம் | சித்தாரா பிக்சர்சு |
விநியோகம் | காந்திமதி பில்ம்சு |
வெளியீடு | சூலை 31, 1987 |
ஓட்டம் | 151 minutes |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
தூவானத் தும்பிகள் (மொ.பெ. Dragonflies in the Spraying Rain) என்பது 1987 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி காதல் நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படமானது பி.பத்மராஜன் எழுதி இயக்கியதாகும், இது இவர் எழுதிய சொந்த புதினமான உதகப்போலயே என்பதை அடிப்படையாகக் கொண்டது. இத்திரைப்படம் ஓர் புதிய முயற்சியில் உருவானதாகும். இது வணிக ரீதியாக தோல்வியடைந்த போதிலும் ரசிகர்களால் இன்றும் பெரிதும் விரும்பப்படுகிறது. அனைத்து காலத்திலும் சிறந்த இந்திய திரைப்படங்களின் பட்டியலில் இது ஐ. பி. என் லைவ் எட்டாவது இடத்தைப் பிடித்தது. இத்திரைப்படமானது சிறந்த இசை, பாடல்கள், உரையாடல்கள், கதாபாத்திரங்கள், விரிவான திரைக்கதை, மோகன்லால் மற்றும் சுமலதாவின் நடிப்பு ஆகியவைகளுக்காக பரவலாக அறியப்படுகிறது. இத்திரைப்படத்தில் மழை என்பது ஓர் முக்கிய கருப்பொருளாகவும், கிட்டத்தட்ட ஓர் கதாபாத்திரமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.[1] [2][3][4][5][6][7][8][9]
ஜெயகிருஷ்ணன் மணமாகாத ஒரு இளைஞர், அவர் ஒரு மாறுபட்ட இரட்டை வாழ்க்கையை வாழ்கிறார். ஒரு வாழ்க்கை நகரத்தில் உள்ள தனது நண்பர்களுடனும், மற்றொரு வாழ்க்கை தனது தாய் மற்றும் சகோதரியுடன் அவர்களின் கிராமத்திலும் வாழ்கிறார் . அவர் நகரத்தில் தனது நண்பர்களுடன் வாழ்க்கையை கொண்டாடும் ஒரு துணிச்சலான பையனாக இருந்தாலும், அவர் வீட்டில் ஒரு சிக்கனமான குடும்ப மனிதர். அவரது இரட்டை வாழ்க்கை, கிளாரா மற்றும் ராதா என்ற இரண்டு பெண்களை அவர் எப்படி காதலிக்கிறார், அவர்களுக்கு இடையே முடிவெடுப்பதில் அவருக்கு ஏற்படும் சிரமம் ஆகியவற்றைப் பற்றிய படம் இது.