தெனோம் மாவட்டம் Tenom District Daerah Tenom | |
---|---|
![]() தெனோம் மாவட்ட அலுவலகம். | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°8′00″N 115°57′00″E / 5.13333°N 115.95000°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
பிரிவு | உட்பகுதி |
தலைநகரம் | தெனோம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,409 km2 (930 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 55,553 |
அஞ்சல் குறியீடு | 899XX |
தொலைபேசி எண் | 087XXXXXX |
இணையதளம் | www www |
தெனோம் மாவட்டம்; (மலாய்: Daerah Tenom; ஆங்கிலம்: Tenom District) என்பது மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். தெனோம் மாவட்டத்தின் தலைநகரம் தெனோம் (Tenom Town).[1]
தெனோம் நகரம், கோத்தா கினபாலுவில் இருந்து தெற்கே 176 கி.மீ. தொலைவிலும்; சபாவின் பிரபலமான இடங்களில் ஒன்றான லோங் பாசியா (Long Pasia) நகரில் இருந்து வடக்கே 145 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[2]
சபா, உட்பகுதி பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
அங்குள்ள மூருட் (Murut) பழங்குடி மக்கள் ஆண்டுதோறும் காளிமாறன் திருவிழாவை (Kalimaran) தெனோம் நகரில் கொண்டாடுகிறார்கள். தெனோம் நகரம் அதன் காபிக்கு பிரபலமானது. ரப்பர் தொழிலுக்கு அடுத்தபடியாக தெனோமின் பொருளாதாரத்தில் காபி தொழில் இரண்டாவது பெரிய பங்களிப்பாக உள்ளது.
கோத்தா கினபாலுவில் இருந்து தெனோம் செல்வதற்கு சபா மாநில தொடருந்து சேவையை (Sabah State Railway) பயன்படுத்தலாம்.
தெனோம் பகுதி, முன்னர் காலத்தில் போர்ட் பர்ச் (Fort Birch) என்று அழைக்கப்பட்டது. பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் (British North Borneo Company) ஆளுநர் எர்னசுடு உட்போர்ட் பர்ச் (North Borneo Governor Ernest Woodford Birch) என்பவரின் பெயர் அந்த நகருக்கு வைக்கப்பட்டது.
1904-ஆம் ஆண்டில் தெனோம் தொடருந்து நிலையத்தில் (Tenom Railway Station) இருந்து; பியூபோர்ட் தொடருந்து நிலையம் (Beaufort Railway Station), மெலாலாப் (Beaufort Railway Station) தொடருந்து நிலையம்; ஆகிய நிலயங்களுக்கு வடக்கு போர்னியோ தொடருந்து பாதை (North Borneo Railway Line) முடிந்ததைத் தொடர்ந்து, போர்ட் பர்ச் என்பது "தெனோம்" என மறுபெயரிடப்பட்டது.
இந்த மாவட்டம் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தால் 1900-ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டது. அதன் முதல் மாவட்ட அதிகாரியாக எம்.சி.எம். வீடன் (M.C.M. Weedon) என்பவர் நியமிக்கப்பட்டார்.
பின்னர் பிரித்தானியர்களால் சாப்போங் தோட்டம் (Sapong Estate) மற்றும் மெலாலாப் தோட்டம் (Melalap Estate) திறக்கப் பட்டதும் தெனோம் நகரமும் வளர்ச்சி காணத் தொடங்கியது. இரண்டு தோட்டங்களும் காபி தோட்டங்கள் ஆகும்.
தெனோம் மாவட்டத்தின் மக்கள் தொகையில் (52%) மூருட் (Murut) பழங்குடி மக்கள் மிக அதிகமாக வாழ்கின்றனர். அதே வேளையில் கடசான்-டூசுன் (Kadazandusun) பழங்குடி மக்கள் (12%); லுன் டாயே (Lundayeh) பழங்குடி மக்கள் (5%); மலாய்க்காரர்கள் (8%); மற்றும் இந்தோனேசியர்கள், பிலிப்பினோக்காரர்களும் சிறுபான்மையினராக உள்ளனர்.[2]
சீனா, குவாங்டொங் (Guangdong) மாநிலத்தில் உள்ள லாங்சுவான் (Longchuan) பகுதியில் இருந்து இங்கு குடியேறிய சீனர்களின் வழித்தோன்றல்களின் வழியாக ஏறக்குறைய 5,000 சீனர்கள் உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் ’ஹக்கா’ (Hakka) இனக் குழுவைச் சேர்ந்தவர்கள்.