தென் கனரா South Canara | |
---|---|
ஆள்கூறுகள்: 13°00′N 75°24′E / 13.00°N 75.40°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,441 km2 (3,259 sq mi) |
மக்கள்தொகை (2001)[1] | |
• மொத்தம் | 30,05,897 |
• அடர்த்தி | 356.1/km2 (922/sq mi) |
மொழிகள் | |
• மொழிகள் | கன்னடம், மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:IN |
வாகனப் பதிவு | KA-19, KA-20, KA-21, KA-62, KL-14 |
பெரிய நகரம் | உடுப்பி |
தென் கன்னட மாவட்டம் அல்லது தென் கனரா மாவட்டம் (South Canara) என்பது பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட ஒரு மாவட்டம் ஆகும். இதன் அமைவிடம் 13°00′N 75°24′E / 13.00°N 75.40°E.[2] ஆகும். இது தற்போதைய கர்நாடக மாவட்டங்களான தெற்கு கன்னடம் மாவட்டம் , உடுப்பி மாவட்டம் மற்றும் கேரளத்தின் காசர்கோடு மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இது இருந்தது. சென்னை மாகாணத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டமான இதில் முதன்மையாக துளுவம், மலையாளம், கன்னடம், கொங்கணி , பியரி ஆகிய மொழிகள் பேசப்பட்டன. இது 1947லில் தட்சிண கன்னட மாவட்டம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
நான்காம் மைசூர் போரின் முடிவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டார். இதன் பின்னர் திப்புசுல்தானிடம் இருந்து கைப்பற்றிய இப்பகுதியை வடகன்னட மாவட்டத்தின் பகுதியையும் உள்ளடக்கியதாக 1799இல் கனரா மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த கனரா மாவட்டமானது சென்னை மாகாணத்துக்கு உட்பட்டதாக இருந்தது. 1859இல் இந்த மாவட்டமானது தெற்கு வடக்கு என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. வட கன்னட மாவட்டமானது பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட, தெற்கு கன்னட மாவட்டமானது சென்னை மாகாணத்துடன் தக்கவைக்கப்பட்டது. தெற்கு கன்னட மாவட்டத்தின் தலைநகராக மங்களூர் இருந்தது. இந்த மாவட்டமானது 10,410 சதுர கிலோமீட்டர்கள் (4,021 sq mi) பரப்பளவு கொண்டதாக இருந்தது.
இந்த மாவட்டமானது ஆறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு இருந்தது:
இந்த மாவட்ட நிர்வாகமானது மாவட்ட ஆட்சியரால் மேற்கொள்ளப்பட்டது. மாவட்டமானது நிர்வாக வசதிக்காக மூன்று கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது:
இந்த மாவட்டத்தில் மங்களூர் மற்றும் உடுப்பி என இரு நகராட்சிகள் இருந்தன.
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1871 | 9,18,362 | — |
1881 | 9,59,514 | +4.5% |
1891 | 10,56,081 | +10.1% |
1901 | 11,34,713 | +7.4% |
Source: Imperial Gazetter of India, Volume 14[3] |
தென் கன்னட மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையானது 1991இல் 1,134,713 ஆகும். இதில் 81 விழுக்காட்டினர் இந்துக்கள், 11 விழுக்காட்டினர் முசுலீம்கள் 7 விழுக்காட்டினர் கிறித்துவர்களாவர். 1901இல் தென் கன்னட மாவட்டத்தின் மக்கள் அடர்த்தியானது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 109 பேர்கள் ஆவர்.
1908 ஆண்டைய இந்திய வேந்திய அரசிதழ் தரும் தகவலின்படி சென்னை மாகாணத்தின் தென் கன்னடம், தஞ்சாவூர் மாவட்டம் , கஞ்சாம் மாவட்டம் ஆகிய மாவட்டங்களானவை பிராமணர்கள் மிகுதியாக உள்ள மாவட்டங்களாகும்.[3]
மாவட்டத்தில் பெரும்பான்மையாக பில்வா, பந்த் மக்கள் இருந்தனர். சென்னை மாகாணத்தில் பிராமணர்கள் மிகுதியாக வாழும் மாவட்டங்களான தஞ்சாவூர் மற்றும் கஞ்சாம் மாவட்டங்களைவிட இந்த மாவட்டத்திலேயே பிராமணர்கள் (மக்கள் தொகையில் 12% ) மிகுதியாக வாழ்ந்து வந்தனர்.[3]
இந்தப் பகுதியின் அசல் பூர்வ குடிகள் துளு மக்கள் (பந்த், பில்வா, மோகவீரர், குலாலர், தேவதிகர்) ஆவர். இப்பகுதியில் முதலில் குடியேறிய பிராமணர்கள் ஸ்தானிகர் ஆவர். இதனால் இவர்கள் துளு பிராமணர்கள் என அழைக்கப்பட்டனர். மற்றவர்கள் ஷிவல்லி, சரஸ்வத், ஹவியக, கோதாஹ உள்ளினத்தவர்கள், மஹார்ஸ், மலை பழங்குடிகள் (கொரகஸ்) ஆவர்.[4]