தென்னக இரயில்வே

13°04′57″N 80°16′37″E / 13.08240°N 80.27705°E / 13.08240; 80.27705

தென்னக இரயில்வே
தென்னக இரயில்வே-7
தென்னக இரயில்வேயின் தலைமையகம், சென்னை
கண்ணோட்டம்
தலைமையகம்சென்னை
வட்டாரம்தமிழ்நாடு, கேரளம், ஆந்திர பிரதேசம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி
செயல்பாட்டின் தேதிகள்1951; 74 ஆண்டுகளுக்கு முன்னர் (1951)
முந்தியவைதென் இந்திய ரயில்வே கம்பெனி
மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே
மைசூர் மாநில இரயில்வே
தொழில்நுட்பம்
தட அளவிஅகல இருப்புப் பாதை மற்றும் குறுகிய இருப்புப் பாதை.
மின்மயமாக்கல்ஆம்
நீளம்5,081 கிலோமீட்டர்கள் (3,157 mi) route[1]
Other
இணையதளம்sr.indianrailways.gov.in

தென்னக இரயில்வே (Southern Railway zone) என்பது விடுதலை பெற்ற இந்தியாவில், இந்திய இரயில்வேயின் 16 மண்டலங்களில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட மண்டலமாகும். ஏப்ரல் 14, 1951 அன்று தென் இந்திய ரயில்வே கம்பெனி, மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே, மைசூர் மாநில இரயில்வே ஆகியவற்றையும் ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டது. தென்னிந்திய இரயில்வே பிரித்தானியர் ஆட்சியில் கிரேட்டர் சௌத்திந்தியன் இரயில்வே நிறுவனமாக பிரிட்டனில் 1853ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 1890இல் பதியப்பட்டது. இதன் தலைமையகம் திருச்சிராப்பள்ளியாக இருந்தது.[2] தென்னக இரயில்வேயின் தலைமையகம் சென்னையில் உள்ளது.

கோட்டங்கள்

[தொகு]

தென்னக இரயில்வேயின் கீழ் ஆறு கோட்டங்கள் இயங்குகின்றன:

இது சேவை புரியும் மாநிலங்கள் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகியன. இவற்றுடன் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களின் சில பகுதிகளும் அடங்கும். ஆண்டுதோறும் 500 மில்லியனுக்கும் கூடுதலான பயணியர் இதன் தொடருந்துகளில் பயணிக்கின்றனர். மற்ற மண்டலங்களைப் போலன்றி தென்னக இரயில்வேயின் வருமானத்தின் பெரும்பகுதி பயணியர் கட்டணம் மூலமாகவே வருகிறது.[3]

இரயில் பாதைகள்

[தொகு]

செயல்பாட்டில் உள்ள ரயில் பாதைகளின் பட்டியல் பின்வருமாறு.[4][5]

வழித்தடம் ஆரம்பம் முடிவு வகை Gauge மின்மயமாக்கல் வழித்தட எண்ணிக்கை வேக வரம்பு நீளம் முதன்மை நிலையங்கள்
Chennai Central-Jolarpettai சென்னை சென்ட்ரல் ஜோலார்பேட்டை முக்கிய அகல ஆம் 2 (4 till Arakkonam) 213 km (132 mi) Katpadi
சென்னை சென்ட்ரல் Renigunta முக்கிய அகல ஆம் 2 (4 till Arakkonam) 130 km max[6] 135 km (84 mi) Arakkonam
கூடூர்-சென்னை பிரிவு சென்னை சென்ட்ரல் Gudur முக்கிய அகல ஆம் 2 (4 From Korukkupet to Athipattu ) 130 km max[6] 136 km (85 mi) Sullurupeta
Jolarpettai–Shoranur ஜோலார்பேட்டை Shoranur முக்கிய அகல ஆம் 2 366 km (227 mi) Salem, Erode, Coimbatore, Coimbatore North, Podanur, Palakkad Junction
Shoranur-Mangalore railway line ஷொர்ணூர் மங்களூர் முக்கிய அகல ஆம் 2 315 km (196 mi) Tirur, Kannur, Kozhikode, Kasaragod, Mangaluru Central, Mangaluru Junction
Shoranur-Ernakulam line Shoranur Cochin Harbour Terminus முக்கிய அகல ஆம் 2 107 km (66 mi) Thrissur, Aluva, Ernakulam Junction, Ernakulam Town
Chennai Egmore-Thoothukudi சென்னை எழும்பூர் தூத்துக்குடி முக்கிய அகல ஆம் 2 (4 till Tambaram, 3 till Chengalpattu) 130 km max work inprogress 654 km (406 mi) Chengalpattu, Villupuram, Virudhachalam, Tiruchirappalli, Dindigul, Madurai, Virudhunagar, Vanchi
Tiruchirappalli-Thanjavur திருச்சி தஞ்சாவூர் கிளை அகல ஆம் 2 110 km max 50 km (31 mi)
Tiruchirappalli-Erode திருச்சி ஈரோடு சந் கிளை அகல ஆம் 1 110 km max 141 km (88 mi) Karur
Salem-Dindigul சேலம் திண்டுக்கல் கிளை அகல ஆம் 1 159 km (99 mi) Karur
Madurai-Rameswaram மதுரை இராமேசுவரம் கிளை அகல ஆம் 1 173.82 km (108.01 mi) Manamadurai
Tiruchirappalli-Sengottai திருச்சி செங்கோட்டை கிளை அகல ஆம் 1 320 km (200 mi) Karaikudi, Manamadurai, Virudhunagar
Vanchi Maniyachchi-Tirunelveli வாஞ்சி மணியாச்சி சந்., திருநெல்வேலி கிளை அகல ஆம் 2 28.9 km (18.0 mi)
Tiruchirappalli-Thanjavur திருச்சி தஞ்சாவூர் கிளை அகல ஆம் 2 50 km (31 mi)
Coimbatore North-Mettupalayam கோயம்புத்தூர் வடக்கு மேட்டுப்பாளையம் கிளை அகல ஆம் 1 110 km max 32.8 km (20.4 mi)
நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து மேட்டுப்பாளையம் உதகமண்டலம் கிளை மீட்டர்-கேஜ் இல்லை 1 45.9 km (28.5 mi) Coonoor
Thrissur-Guruvayur line Thrissur Guruvayur கிளை அகல ஆம் 1 22.6 km (14.0 mi)
Shoranur -Nilambur line Shoranur Nilambur Road கிளை அகல ஆம் [7] 1 65.8 km (40.9 mi)
Ernakulam–Kayamkulam coastal line Ernakulam Junction காயம்குளம் சந்திப்பு தொடருந்து நிலையம் கிளை அகல ஆம் 1 ( 2 in Ambalapuzha-Kayamkulam section ) 100.34 km (62.35 mi) Alappuzha
Ernakulam–Kottayam–Kayamkulam line Ernakulam Junction /
Ernakulam Town
காயம்குளம் சந்திப்பு தொடருந்து நிலையம் முக்கிய அகல ஆம் 2 114.4 km (71.1 mi) Kottayam
Kollam-Sengottai line Kollam Junction செங்கோட்டை கிளை அகல ஆம் 1 94 km (58 mi) Punalur
Kayamkulam-Kollam-Thiruvananthapuram line காயம்குளம் சந்திப்பு தொடருந்து நிலையம் திருவனந்தபுரம் சென்ட்ரல் முக்கிய அகல ஆம் [8] 2 105 km (65 mi) Kollam, Thiruvanathapuram North(Kochuveli), Thiruvanathapuram Central
Thiruvananthapuram–Nagercoil–Kanyakumari line திருவனந்தபுரம் சென்ட்ரல் கன்னியாகுமரி கிளை அகல ஆம் 1 ( 2 in Nagercoil Junction - Nagercoil Town - Kanyakumari section) 89 km (55 mi) Thiruvananthapuram South(Nemom), Nagercoil Junction, Nagercoil Town
Nagercoil - Tirunelveli நாகர்கோவில் திருநெல்வேலி முக்கிய அகல ஆம் 2 110 km[9][10] 73 km ( 45.3 mi)
Tenkasi-Tiruchendur தென்காசி திருச்செந்தூர் கிளை அகல ஆம் 1 61.2 km (38.0 mi)
Tenkasi-Sengottai தென்காசி செங்கோட்டை கிளை அகல ஆம் 1 8 km (5.0 mi)
Irugur-Podanur Irugur போத்தனூர் கிளை அகல ஆம் 1 10.9 km (6.8 mi)
Dindigul-Pollachi திண்டுக்கல் பொள்ளாச்சி கிளை அகல ஆம் 1 120.7 km (75.0 mi) Palani
Podanur-Pollachi போத்தனூர் பொள்ளாச்சி கிளை அகல ஆம் 1 40 km (25 mi)
Palakkad–Pollachi line Palakkad பொள்ளாச்சி கிளை அகல ஆம் 1 57.8 km (35.9 mi)
Salem-Mettur Dam சேலம் மேட்டூர் அணை கிளை அகல ஆம் 2 38.9 km (24.2 mi)
Salem-Virudhachalam விருத்தாச்சலம் சந்., கிளை அகல ஆம் 1 110 km max 139 km (86 mi)
Cuddalore-Thanjavur கடலூர் துறைமுகம் தஞ்சாவூர் கிளை அகல ஆம் 1 146 km (91 mi) Mayiladuthurai
Cuddalore-Virudhachalam கடலூர் துறைமுகம் விருத்தாச்சலம் சந்., கிளை அகல ஆம் 1 57 km (35 mi)
Villupuram-Puducherry விழுப்புரம் புதுச்சேரி கிளை அகல ஆம் 1 110 km max 37.6 km (23.4 mi)
Villupuram-Katpadi விழுப்புரம் காட்பாடி கிளை அகல ஆம் 1 110 km max 161 km (100 mi) Tiruvannamalai
Thanjavur-Karaikal தஞ்சாவூர் காரைக்கால் கிளை அகல ஆம் 1 110 km max 95.4 km (59.3 mi) Nagapattinam
Mayiladuthurai-Thiruvarur மயிலாடுதுறை சந்., திருவாரூர் சந்திப்பு தொடருந்து நிலையம் கிளை அகல ஆம் 1 39 km (24 mi)
Arakkonam-Chengalpattu அரக்கோணம் செங்கல்பட்டு கிளை அகல ஆம் 1 68 km (42 mi)
Nagapattinam-Velankanni நாகப்பட்டினம் சந் வேளாங்கண்ணி கிளை அகல ஆம் 1 10.4 km (6.5 mi)
Madurai-Bodinayakkanur மதுரை போடிநாயக்கனூர் கிளை அகல ஆம் 1 88 km (55 mi)
Thiruvarur-Tiruturaipundi திருவாரூர் சந்திப்பு தொடருந்து நிலையம் திருத்துறைப்பூண்டி கிளை அகல WIP for Electification 1 26 km (16 mi)
Karaikkudi-Tiruturaipundi காரைக்குடி திருத்துறைப்பூண்டி கிளை அகல WIP for Electification 1 149 km (93 mi)
Tiruturaipundi-Agastiyampalli திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி கிளை அகல WIP for Electification 1 36.8 km (22.9 mi)

முதன்மை இருப்புப்பாதை தடங்கள்

[தொகு]
  1. சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் - காட்பாடி - ஜோலார்பேட்டை - சேலம் - ஈரோடு - திருப்பூர் - கோயம்புத்தூர்
  2. சென்னை எழும்பூர் - மங்களூரு சென்ட்ரல்
  3. சென்னை எழும்பூர் - விழுப்புரம் - விருத்தாசலம் - திருச்சிராப்பள்ளி - திண்டுக்கல் - மதுரை - விருதுநகர் - வாஞ்சிமணியாச்சி - திருநெல்வேலி - நாகர்கோவில் - கன்னியாகுமரி
  4. சென்னை எழும்பூர் - தாம்பரம் - செங்கல்பட்டு - விழுப்புரம் - விருத்தாச்சலம் - அரியலூர் - ஸ்ரீரங்கம் - திருச்சிராப்பள்ளி - புதுக்கோட்டை - காரைக்குடி
  5. கோயம்புத்தூர் - திருச்சூர் - எர்ணாகுளம் - திருவனந்தபுரம் சென்ட்ரல்
  6. மங்களூர் சென்ட்ரல் - கோழிக்கோடு - சோரனூர் - கோயம்புத்தூர்
  7. ஈரோடு - கரூர் - திருச்சிராப்பள்ளி - தஞ்சாவூர் - திருவாரூர் - நாகப்பட்டினம் - காரைக்கால்
  8. திருச்சி - புதுக்கோட்டை - காரைக்குடி - சிவகங்கை - மானாமதுரை - இராமநாதபுரம் - இராமேஸ்வரம்
  9. சேலம் - நாமக்கல் - கரூர் - திண்டுக்கல் - பொள்ளாச்சி -பாலக்காடு
  10. புதுச்சேரி - விழுப்புரம் - திருவண்ணாமலை - காட்பாடி
  11. திருச்செந்தூர் - திருநெல்வேலி - தென்காசி
  12. விருதுநகர் - சிவகாசி - ராஜபாளையம் - ஸ்ரீவில்லிபுத்தூர் - சங்கரன்கோவில் - கடையநல்லூர் - தென்காசி -செங்கோட்டை - கொல்லம்
  13. சேலம் - தர்மபுரி - ஓசூர் - பெங்களுரூ
  14. சேலம் - மேட்டூர் அணை
  15. சேலம் - விருத்தாசலம் - சென்னை எழும்பூர்
  16. தஞ்சாவூர் - கும்பகோணம் - மயிலாடுதுறை - கடலூர் - விழுப்புரம்
  17. வாஞ்சிமணியாச்சி - தூத்துக்குடி
  18. விருதுநகர் - அருப்புக்கோட்டை - மானாமதுரை
  19. காரைக்குடி - திருத்துறைப்பூண்டி - திருவாரூர் - மயிலாடுதுறை
  20. கடலூர் துறைமுகம் சந்திப்பு - விருதாச்சலம் சந்திப்பு
  21. கடலூர் துறைமுகம் - திருச்சிராப்பள்ளி சந்திப்பு
  22. நீடாமங்கலம் - மன்னார்குடி

காலக்கோடும் முக்கிய நிகழ்வுகளும்

[தொகு]

1832 : இந்திய பிராந்தியத்தின் முதல் தொடருந்து திட்டம் சென்னை மாகாணத்தில் பரிசளிக்கபட்டது. ஆனால் அது ஒரு கனவாகவே போனது.

  • 1845 : (மே 8) மெட்ராஸ் ரயில்வே கம்பெனி தொடங்கப்பட்டது .
  • 1853 : மெட்ராஸ் ரயில்வே கம்பெனி பதிவு செய்யப்பட்டு சென்னை (ராயபுரம்) - வாலாஜா ரோடு பாதையில் பணியை துவங்கியது.
  • 1856 : ராயபுரம் வாலாஜா ரோடு பாதைப் பணி மே 28 முடிவடைந்து ஜூன் 1 அன்று தென்னகத்தின் முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கியது. லோகோ கரேஜ் வாகன பணிமனை பெரம்பூரில் தொடங்கப்பட்டது.
  • 1857 : வாலாஜா ரோடு - கடலூர் ரயில் பாதை . காட்பாடி, திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக அடிக்கல் நாட்டப்பட்டது.
  • 1861 : வாலாஜா சாலையில் இருந்து பெய்பூர்/கடலண்டி (கோழிக்கோடு) வரை நீட்டிக்கப்பட்டது. கிரேட் சதர்ன் ரயில்வே ஆப் இந்தியா நாகப்பட்டினத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி வரையிலான 125 கி.மீ. பாதையை அமைத்தது. வாலாஜா ரோடு - கடலூர் ரயில் பாதை - காட்பாடி , திருவண்ணாமலை , திருக்கோவிலூர் , விழுப்புரம் வழியாக திறக்கப்பட்டது
  • 1862 : மெட்ராஸ் ரயில்வே அரக்கோணத்தில் இருந்து ரேணிகுண்டா வரை பாதையை அமைத்து முடித்தது. சென்னையில் உள்ளூர் போக்குவரத்துக்காக இந்தியன் ட்ரம்வே கம்பெனி தொடங்கப்பட்டது. நாகப்பட்டினத்தில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு பயணிகள் ரயில் சேவை துவங்கியது.
  • 1864 : ஜோலார்பேட்டையில் முதல் பெங்களூரு கண்டோன்மென்ட் வரை பணிகள் முடிந்து பெங்களூர் மெயில் தன் சேவையை துவங்கியது.
  • 1865 : இந்தியன் ட்ரம்வே கம்பெனி அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு 3' 6" அளவிலான பாதையை அமைத்தது.
  • 1868 : நாகப்பட்டினம் - திருச்சிராப்பள்ளி பாதை ஈரோடு வரை நீட்டிக்கப்பட்டது.
  • 1872 : கிரேட் சதர்ன் ரயில்வே ஆப் இந்தியாவும் கர்நாடிக் ரயில்வேயும் இணைக்கபட்டன. 1874 இல் (SIR ) சவுத் இந்தியன் ரயில்வே என பெயர் மாற்றம் பெற்றது
  • 1875 : நாகப்பட்டினம் - திருச்சிராப்பள்ளி அகல பாதை மீட்டர் கேஜ் ஆக மற்றபட்டது. திருச்சிராப்பள்ளியில் இருந்து மதுரை வரை மீட்டர் கேஜ் பாதை போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது.
  • 1879 : பிரெஞ்சு அரசும் பிரித்தானிய அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, விழுப்புரம் - பாண்டிச்சேரி இடையே மீட்டர் கேஜ் பாதை அமைக்கப்பட்டது.

கொள்ளிடம் ஆற்றுப் பாலம் வேலை முடிந்து சென்னை - தஞ்சாவூர் ரயில் சேவை துவங்கியது (இதற்கு முன்பு இரு வழியிலும் இருந்தும் கொள்ளிடம் வரை ரயில்கள் இயக்கப்பட்டன)

  • 1891 : சனவரி முதல் சவுத் இந்தியன் ரயில்வே அரசு உடமையாக்கப்பட்டது. நீலகிரி மலை ரயில் பாதை பணி ஆரம்பம் ஆயிற்று.
  • 1898 : பிரெஞ்சு அரசும் பிரித்தானிய அரசும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, பேரளம் - காரைக்கால் இடையே மீட்டர் கேஜ் பாதை அமைக்கப்பட்டது.
  • 1898 : மேட்டுப்பாளையம் - குன்னூர் சேவை தொடங்கியது.
  • 1899 : சென்னை - விஜயவாடா பயணிகள் சேவை தொடங்கியது. போட் மெயில் எனப்படும் சிலோன் பயணிகள் கப்பல் உடன் இணைக்கும் சேவை சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை ஆரம்பமாயிற்று.
  • 1902 : சோரனூர் கொச்சின் பாதை அமைக்கப்பட்டது.
  • 1907 : கோழிக்கோடும் மங்களூரும் இணைக்கப்பட்டன.
  • 1908 : சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கட்டப்பட்டது.
  • 1929 : சென்னை புறநகர் ரயில் பணிகள் துவங்கின.
  • 1931 : சென்னை கடற்கரை தாம்பரம் பணி முடிவடைந்து நாட்டின் முதல் மீட்டர் கேஜ் மின்சார ரயில் சேவை துவங்கப்பட்டது (2004 இல் நிறுத்தப்பட்டு அகல பாதையாக மாற்றப்பட்டது .
  • 1934 : சோரனூர் கொச்சின் பாதை அகல பாதையாக மாற்றப்பட்டது.
  • 1944 : மெட்ராஸ் சதர்ன் மாராத்த ரயில்வே சவுத் இந்தியன் ரயில்வே (SIR) உடன் இணைந்தது.
  • 1951 : ஏப்ரல் 14 மெட்ராஸ் சதர்ன், மாராத்த ரயில்வே, சவுத் இந்தியன் ரயில்வே, மைசூர் ஸ்டேட் ரயில்வே, ஆகிய மூன்றும் இணைந்தன இந்திய ரயில்வேயின் கிழ் ஒரு புது மண்டலமாக தென்னக ரயில்வே உதயமாயிற்று.
  • 1963 : விருதுநகர் - அருப்புக்கோட்டை பாதை அமைக்கப்பட்டது
  • 1964 : அருப்புக்கோட்டை -மானாமதுரை பாதை அமைக்கப்பட்டது
  • 1965 : சென்னை - தாம்பரம்-விழுப்புரம் பாதை (25KV AC) மின்சாரப் பாதையாக மாற்றப்பட்டது .
  • 1966 : தென்னக ரயில்வேயில் இருந்து விஜயவாடா, ஹுப்ளி, குண்டக்கல் கோட்டங்களை பிரித்து, தென் மத்திய ரயில்வே உருவாக்கப்பட்டது.
  • 1975 : எர்ணாகுளம் - கொல்லம் மீட்டர் கேஜ் அகல பாதையாக மாற்றப்பட்டது.
  • 1976 : சென்னை - டெல்லி - தமிழ்நாடு விரைவு வண்டி இயக்கப்பட்டது.

(செப்டம்பர் 13) எர்ணாகுளம் - திருவனந்தபுரம் அகல பாதை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது

  • 1979 : சென்னை - கும்மிடிபூண்டி (ஏப்ரல் 13), சென்னை -திருவள்ளூர் (நவம்பர் 23) மின்மயம் ஆக்கப்பட்டது.

நாகர்கோயில் வழியாக திருவனந்தபுரம் கன்னியாகுமரி பாதையும் நாகர்கோயில் திருநெல்வேலி பாதையும் திறக்கபட்டன. (அக்டோபர் 2) திருவனந்தபுரம் கோட்டம் உருவாக்கப்பட்டது.

  • 1982 : திருவள்ளூர் - அரக்கோணம் மின்மயம் ஆக்கப்பட்டது .
  • 1987 : சென்னை ஆவடி புறநகர் (EMU) சேவை துவக்கம்.
  • 1988 : கரூர் - திண்டுக்கல் அகலப் பாதை திறக்கப்பட்டது.
  • 1989 : எர்ணாகுளம் - ஆலப்புழா அகலப் பாதை திறக்கப்பட்டது.
  • 1992 : ஆலப்புழா - காயன்குளம் அகலப் பாதை திறக்கப்பட்டது.
  • 1995 : (ஏப்ரல் 2) சென்னை - தாம்பரம் (மெயின் லைன்) அகலப் பாதை திறக்கப்பட்டது.
  • 1997 : சென்னை கடற்கரை - மைலாப்பூர் பறக்கும் ரயில் (MRTS) இயக்கப்பட்டது.
  • 1998 : தாம்பரம் - திருச்சிராப்பள்ளி (கார்டு லைன்), திருச்சிராப்பள்ளி - தஞ்சை அகலப் பாதை திறக்கப்பட்டது.
  • 1999 : (ஜனவரி 6) திருச்சிராப்பள்ளி - திண்டுக்கல் அகலப் பாதை திறக்கப்பட்டது.
  • 2002 : தென்னக இரயில்வேயில் இருந்து பெங்களுரு மைசூர் கோட்டங்களை பிரித்து புதிய மண்டலமாக தென் மேற்கு ரயில்வே உருவாக்கப்பட்டது. திருச்சூர் எர்ணாகுளம் மின்மயம் ஆக்கப்பட்டது .
  • 2004 : சென்னையில் மைலாப்பூரில் இருந்து திருவான்மியூர் வரை பறக்கும் இரயில் இயக்கப்பட்டது.
  • 2005 : நீலகிரி மலை ரயிலை யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்தது.
  • 2007 : (அக்டோபர் 12) அகல பாதையாக மாற்றப்பட்ட பின் பாம்பன் பாலத்தின் மீது முதல் ரயில் இயக்கம்.

(நவ7) திருச்சி, பாலக்காடு கோட்டங்களில் இருந்து பிரித்து சேலம் கோட்டம் துவக்கப்பட்டது விருத்தாசலம் சேலம் அகல பாதையாக மாற்றப்பட்டு நவம்பர் 18 அன்று போக்குவரத்துக்கு துவங்கியது. நவம்பர் 19 சென்னை பறக்கும் ரயில் சேவையின் மைலாப்பூர் வேளச்சேரி பாதை திறக்கப்பட்டது.

  • 2010 : (ஏப்ரல் 23) விழுப்புரம் மயிலாடுதுறை அகலப் பாதையாக மாற்றப்பட்டு முதல் பயணிகள் போக்குவரத்துக்கு துவங்கியது. (குறுகிய இருப்புப் பாதை 2006 திசம்பரில் மூடப்பட்டது).
  • 2012 : கரூர் - சேலம் அகலப் பாதை திறக்கப்பட்டது.

சிறப்புகள்

[தொகு]

நீலகிரி மலை ரயில்

[தொகு]

இந்த ரயிலின் வழித்தடத்தில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை உள்ள பகுதி ஆசியாவிலேயே மிகவும் செங்குத்தான பகுதி. இந்த பகுதியின் 45 கிலோமீட்டர் தொலைவில் மொத்தம் 208 வளைவு, 16 குகை பாதை, 250 பாலங்கள் ஆகியன உள்ளன. ரயில் மலையில் ஏறும்போது என்ஜின் பின்புறத்தில் இருக்கும். அதாவது இழுத்து செல்லாமல் தள்ளிச் செல்லும்.

பாம்பன் பாலம்

[தொகு]

இது கடல் மேல் அமைந்துள்ள இருப்புவழி பாதை பாலம். கப்பல் இப்பாலத்தை கடக்கும் பொழுது இப்பாலம் இரண்டாக பிரிந்து மேலே எழும்பி வழி விட்டு பின் ஒன்று சேரும். இத்தொழில் நுட்ப விசித்திரம் 20ஆம் நூற்றாண்டு (1914) தொடக்கத்தில் கட்டப்பட்டது .

வல்லார்பாடம் பாலம்

[தொகு]

இது கேரள மாநிலத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் மிக நீளமான (4.62கி.மீ.) தொடருந்து பாலமாகும். இது வல்லார்பாடம் சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தையும் கொச்சியின் புறநகரான எடப்பள்ளியையும் இணைக்கிறது. இது எண்பது சதவிகிதம் வேம்பநாட்டு ஏரி மீதும், மூன்று சிறு தீவுகளின் மீதும் அமைந்து உள்ளது.

பொன்மலை பணிமனை

[தொகு]

இது திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது. டார்ஜிலிங் மலை ரயிலுக்காக எண்ணெயில் இயங்கும் என்ஜினை உருவாக்கியது. மொசாம்பிக் உள்ளிட்ட சில நாடுகளுக்காக 3000 எச்.பி கபே கேஜ் டீசல் எஞ்சினை உருவாக்கியது. மீட்டர் கேஜ் எஞ்சினை சிறு உபயோகத்திற்காக பயன்படும் வகையில் அகல பாதை எஞ்சினாக மாற்றியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Southern Railway vital statistics" (PDF). Southern Railway. Retrieved 20 January 2019.
  2. "Origins of Southern Railway". www.hinduonnet.com. 
  3. "Southern Railways revenue generation mode". www.thehindubusinessline.com. 
  4. Southern Railway Route Map (PDF) (Report). இந்திய இரயில்வே. Archived (PDF) from the original on 12 August 2023. Retrieved 12 August 2023.
  5. https://cag.gov.in/uploads/download_audit_report/2021/22%20of%202021-0624d80426ef498.58288689.pdf
  6. 6.0 6.1 https://news.railanalysis.com/southern-railway-increases-maximum-permissible-speed-on-around-2037-route-kms-in-the-financial-year-2022-23/
  7. "Electrification of Shoranur-Nilambur rail line completed". The Hindu இம் மூலத்தில் இருந்து 5 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240405095838/https://www.thehindu.com/news/national/kerala/electrification-of-shoranur-nilambur-rail-line-completed/article68010446.ece. 
  8. "Rail electrification: inspection begins". தி இந்து. 14 December 2006 இம் மூலத்தில் இருந்து 18 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240518163838/https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/rail-electrification-inspection-begins/article3033562.ece. 
  9. https://news.railanalysis.com/southern-railway-targets-on-speed-enhancement-works-to-increase-trains-speed-on-vital-sections-in-the-current-financial-year-2023-24/#:~:text=Over%20413.62%20Route%20Kms%20of,completed%20in%20FY%202022%2D23.
  10. https://railanalysis.in/rail-news/insights-on-speed-enhancement-achieved-by-southern-railway-and-works-in-progress-in-tamil-nadu/

வெளியிணைப்புகள்

[தொகு]