தென்னிந்திய உணவு (South Indian cuisine) என்பது ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து இந்திய மாநிலங்களின் உணவு வகைகளில் அடங்கும். மேலும் லட்சத்தீவுகள், பாண்டிச்சேரி, மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் யூனியன் பிரதேசங்களின் உணவு வகைகளும் அடங்கும்.
ஐந்து மாநிலங்களின் உள்ள உணவு வகைகளில் அரிசி ஒரு பிரதான உணவாகும், பருப்பு மற்றும் மசாலாப் பொருட்கள், காய்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் புதிய பச்சை மிளகாய், தேங்காய், மற்றும் கனிகள், காய்கள் உட்பட புளி, வாழை, புடலங்காய், பூண்டு, மற்றும் இஞ்சி போன்றவைகளும் அடங்கும். உணவு முறைகள் தயாரிக்கப்படுவதில் பொதுவாக கார்ப்புத்தன்மை மட்டுமே வேறுபடுகின்றன.
தமிழகம், தென் கடலோர கர்நாடகம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் பல இடங்களிலும் அரிசி அதிகம் பயன்படுத்துகிறார்கள். ராகி, அல்லது விரல் தினை, தென் கர்நாடக மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். வட கர்நாடக பகுதிகளில், கம்பு (முத்து தினை) மற்றும் சோளம், தெலுங்கானா மாநிலத்தில் சோளம் மற்றும் கம்பு பயன்படுத்தப்படுகிறது. பிராமண சமூகங்களில் அரிசி நுகர்வு மிகவும் பொதுவானது. [ சான்று தேவை ]
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து உணவு வகைகளும் இந்திய உணவு வகைகளாகும். மிளகாய்த்தூள் மற்றும் புளித்தண்ணீர் தாராளமாகப் பயன்படுத்தி சூடாகவும் ருசியாகவும் வழங்கப்படுகிறது. பெரும்பாலான உணவுகள் காய்கறி அல்லது பருப்பு சார்ந்தவையே ஆகும்.
ஆந்திரப் பிரதேசத்தை அவற்றின் உணவு வகைகளைக் கொண்டு மூன்று பகுதிகளாக வேறுபடுத்தலாம். மத்திய இந்தியா மற்றும் விதர்பா எல்லைகளை பகிர்ந்து கொண்டிருக்கும் தெலுங்கானா பகுதியில், சோளம் மற்றும் கம்பு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சப்பாத்தியே பிரதான உணவாக உள்ளது. கிழக்கு கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டுடனான எல்லைகளைக் கொண்டுள்ள ராயலசீமா மாவட்டத்தின் உணவு வகைகள் அந்தப் பகுதிகளுக்குண்டான ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.
மிகவும் வளமான ஆந்திர கடற்கரைப் பகுதி வங்காள விரிகுடாவின் நீண்ட கடற்கரையுடன் உள்ளது, அதன் உணவு வகை கடல் உணவு வகைகளை உள்ளடக்கிய ஒரு தனித்துவமான வாசனையை கொண்டுள்ளது. தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத், அதன் சொந்த குணாதிசயமான உணவு வகைகளைக் கொண்டுள்ளது, இது மற்ற ஆந்திர உணவு வகைகளிலிருந்து மிகவும் வேறுபட்டதாகும். நிசாம்கள் அறிமுகப்படுத்திய ஹைதராபாதி சமையல், மிகவும் பிரசித்திப் பெற்றது. ஹைதராபாத் மக்கள் தங்கள் உணவில் மசாலாப் பொருட்கள் அதிகம் இடம்பெற விரும்புகின்றனர். தனித்த ஹைதராபாத் உணவு வகைகளில், இறைச்சி கொண்டு தயாரிக்கப்படும் பிரியாணி , தும் கா முர்க் ( ஹைதராபாத் பாணியில் சமைக்கப்படும் கோழி), பகாரா பெயிங்கன் (கத்திரிக்காய்), மற்றும் அச்சாரி சுப்சி (காய்கறிகள் சேர்த்தது ஊறுகாய்). போன்ற உணவுகள் அடங்கியது.
கர்நாடகா மிகவும் மாறுபட்ட உணவு வகைகளை கொண்டுள்ளது. இட்லி , வடை மற்றும் மசாலா தோசை போன்ற மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய தென்னிந்திய காலை உணவு வகைகள் கர்நாடகாவில் உள்ள உடுப்பி கோவில்களில் தோன்றியதாக நம்பப்படுகிறது. கர்நாடக பாரம்பரிய உணவுகளில், வெல்லம், வெங்காயம், பனை சர்க்கரை மற்றும் மிளகாய் தூள் ஆகியவை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், வடக்கு கர்நாடக உணவு, சுவையாகவும் மற்றும் மிகவும் சூடாக இருக்கும், கர்நாடகாவில் சைவ உணவு உண்பவர்கள் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக இருப்பதால், சைவ உணவு பரவலாக பிரபலமாக இருக்கிறது.
கேரளாவின் உணவு மிகவும் வேறுபட்டது, பல்வேறு சமூகங்களின் அடிப்படையில் ஒரு பன்முகத்தன்மையுடன் இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. சிரிய கிரிஸ்துவர் உணவுகள் மற்றும் மலபார் முஸ்லீம் உணவுகள் புகழ்பெற்றவை. கேரளாவின் பிரதான ஏற்றுமதி தேங்காய் ஆகும். கிட்டத்தட்ட அனைத்து சமூகங்களின் சாப்பாட்டின் அனைத்து சமையல் வகைகளுக்கும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. கடலோர பகுதிகளிலும் கடல் உணவு மிகவும் பிரபலமாக உள்ளது. இது மக்களால் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் சாப்பிடப்படுகிறது.
ஒரு பொதுவான தமிழ் உணவு பல காரமான மற்றும் மசாலா உணவுகளை கொண்டுள்ளது. பொதுவாக வேகவைத்த அரிசி கொண்டு சமைக்கப்படுகிறது, இது தமிழ்நாட்டின் முக்கிய உணவு ஆகும். பிராமணர்கள் மற்றும் ஒருசில பிராமணரல்லாதவர்கள் தவிர, பெரும்பாலான தமிழர்கள் அசைவ உணவு சாப்பிடுகிறார்கள். இருப்பினும், ஒரு பொதுவான நாளில், தமிழ் குடும்பத்தில் பெரும்பாலும் சைவ உணவே சாப்பிடப்படுகிறது, அந்த நாட்களில் உலகின் பெரும்பாலான பகுதிகளில் இறைச்சி உட்கொள்ளல் குறைவாக உள்ளது.
தமிழ் உணவு வழங்கும் உணவகங்கள் வழக்கமாக இரு வகையான உள்ளன சைவ உணவகங்கள்(சைவ உணவு மட்டும்) மற்றும் பெயரளவிலான அசைவ உணவகம் (அசைவ மற்றும் சைவ உணவு ஆகிய இரண்டும்). காபி மற்றும் தேநீர் இரண்டும் இரண்டு வகை உணவகங்களிலும் வழங்கப்படும் ஒரு பிரதான பானமாகும்.[1]