தென்மராட்சி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் நான்கு பெரும் பிரிவுகளுள் ஒன்று. ஏனையவை வடமராட்சி, வலிகாமம், தீவகம் ஆகியன. தென்மராட்சிக்கு மேற்கே வலிகாமமும், வடக்கே வடமராட்சியும், தெற்கே யாழ்ப்பாணக் கடலேரியும், கிழக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பிரிவான பச்சிலைப்பள்ளியும் உள்ளன.
தென்மராட்சியின் தலைநகரம் சாவகச்சேரி. சாவகச்சேரி நகரம் சாவகச்சேரி நகர சபையினால் நிர்வாகம் செய்யப்படுகிறது. கைதடி, வரணி, மட்டுவில், கொடிகாமம், கச்சாய் போன்றவை தென்மராட்சியில் உள்ள ஊர்களுட் சில.