தெபெடு Tebedu | |
---|---|
ஆள்கூறுகள்: 1°01′00″N 110°22′00″E / 1.01667°N 110.36667°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | செரியான் பிரிவு |
மாவட்டம் | தெபெடு மாவட்டம் |
நிர்வாக மையம் | தெபெடு |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
தெபெடு (மலாய் மொழி: Bandar Tebedu; ஆங்கிலம்: Tebedu Town) என்பது மலேசியா, சரவாக், செரியான் பிரிவில் உள்ள ஒரு நகரம். இந்த நகரம் தெபெடு மாவட்டத்தின் நிர்வாக மையமாக விளங்குகிறது. சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங்கிற்கு தெற்கே 63.2 கிலோமீட்டர் (39 மைல்) தொலைவில் உள்ளது.[1]
தெபெடு நகரம் இந்தோனேசியா-மலேசியா எல்லையின் பன்னாட்டு நுழைவாயிலாக அமைகிறது. இந்த நகரம் மேற்கு கலிமந்தனில் உள்ள பொந்தியானாக் நகரத்தையும் சரவாக்கில் உள்ள கூச்சிங் நகரத்தையும் இணைக்கிறது.[2][3]
தெபெடு நகரத்தின் எல்லையில் இந்தோனேசிய நகரமான எந்திகோங் உள்ளது. நகரத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் பிடாயூ பழங்குடியின மக்கள். சிறுபான்மை சீனர்கள் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு உள்ளனர்.
சரவாக்கின் நிலவழி ஏற்றுமதி வர்த்தகம், பெரும்பாலும் புரூணையின் எல்லை நகரமான சுங்கை தூஜோ வழியாகவும் அல்லது தெபெடு நகரத்தின் வழியாகவும் நடைபெறுகிறது.[4]