தெப்ராவ் (P158) மலேசிய மக்களவைத் தொகுதி ஜொகூர் | |
---|---|
Tebrau (P158) Federal Constituency in Johor | |
தெப்ராவ் மக்களவைத் தொகுதி (P158 Tebrau) | |
மாவட்டம் | ஜொகூர் பாரு மாவட்டம்; கூலாய் மாவட்டம்; கோத்தா திங்கி மாவட்டம்; |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 223,301 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | தெப்ராவ் தொகுதி |
முக்கிய நகரங்கள் | உலு திராம்; பிளந்தோங்; தம்போய் |
பரப்பளவு | 502 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | ஜிம்மி புவா வீ இசு (Jimmy Puah Wee Tse) |
மக்கள் தொகை | 475,267 (2020)[4][5] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
தெப்ராவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tebrau; ஆங்கிலம்: Tebrau Federal Constituency; சீனம்: 地不佬国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டம்; கூலாய் மாவட்டம்; கோத்தா திங்கி மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P158) ஆகும்.[6]
தெப்ராவ் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து தெப்ராவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]
ஜொகூர் பாரு மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு ஜொகூர் பாரு தலைநகரமாக விளங்குகிறது.
ஜொகூர் பாரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரம் இசுகந்தர் புத்திரி. மாவட்ட எல்லைகளாக மேற்கில் பொந்தியான் மாவட்டம்; கிழக்கில் கோத்தா திங்கி மாவட்டம்; வடக்கே கூலாய் மாவட்டம்; தெற்கே ஜொகூர் நீரிணை உள்ளன.
ஜொகூர் பாரு மாவட்டம் நன்கு வளர்ச்சி பெற்ற ஒரு பெருநகர மயமான மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் துரிதமான வளர்ச்சியினால், மூன்று துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு மூன்று தனித்தனிப் பிரிவுகளாக நிர்வாகம் செய்யப் படுகிறது.
தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
தெப்ராவ் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P129 | 1986–1990 | சித்தி சைனாபோன் அபு பக்கர் (Siti Zainabon Abu Bakar) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P140 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | முகமட் அலி அசன் (Mohd. Ali Hassan) | ||
11-ஆவது மக்களவை | P158 | 2004–2008 | தெங் பூன் சூன் (Teng Boon Soon) |
பாரிசான் நேசனல் ((மலேசிய சீனர் சங்கம்) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | கூ சூ சியாங் (Khoo Soo Seang) | ||
14-ஆவது மக்களவை | 2018–2021 | சூங் சியாவ் இயூன் (Choong Shiau Yoon) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) | |
2021 | சுயேச்சை | |||
2021–2022 | மலேசிய தேசிய கட்சி | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | ஜிம்மி புவா வீ இசு (Jimmy Puah Wee Tse) |
பாக்காத்தான் அரப்பான் (மக்கள் நீதிக் கட்சி) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
ஜிம்மி புவா வீ இசு (Jimmy Puah Wee Tse) | பாக்காத்தான் அரப்பான் | 83,959 | 49.99 | 12.10 ▼ | |
முகமட் இசா முகமட் பாசிர் (Mohamad Isa Mohamad Basir) | பெரிக்காத்தான் நேசனல் | 53,239 | 31.70 | 31.70 | |
நிக்கோல் வோங் சியாவ் திங் (Nicole Wong Siaw Ting) | பாரிசான் நேசனல் | 30,767 | 18.32 | 7.96 ▼ | |
மொத்தம் | 1,67,965 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 1,67,965 | 99.14 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 1,449 | 0.86 | |||
மொத்த வாக்குகள் | 1,69,414 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 2,23,301 | 75.90 | 9.78 ▼ | ||
Majority | 30,720 | 18.29 | 18.13 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [9] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)