தெமங்கோர் அணை Temenggor Dam | |
---|---|
![]() தெமங்கோர் ஏரி | |
அதிகாரபூர்வ பெயர் | Empangan Temenggor |
நாடு | ![]() ![]() |
அமைவிடம் | கிரிக், பேராக், மலேசியா |
புவியியல் ஆள்கூற்று | 5°24′24″N 101°18′04″E / 5.40667°N 101.30111°E |
நோக்கம் | மின்சார உற்பத்தி |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
திறந்தது | 1972 |
தெமங்கோர் அணை (மலாய்: Empangan Temenggor; ஆங்கிலம்: Temenggor Dam); என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், உலு பேராக் மாவட்டத்தில் (Hulu Perak District) கிரிக் பகுதியில் அமைந்துள்ள ஓர் அணையாகும்.
இந்த அணை, ஈப்போவில் இருந்து வடகிழக்கே சுமார் 200 கி.மீ. தொலைவில் பேராக் ஆற்றில் அமைந்துள்ளது. அணையின் கட்டுமானத்தினால் தெமங்கோர் ஏரி ஈர்த்துக் கொள்ளப்பட்டது. ஏரியின் நடுவில் உள்ள தீவு பன்டிங் தீவு என்று அழைக்கப்படுகிறது.[1]
மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக தெமங்கோர் அணை (Temenggor Dam) கட்டப்பட்டதன் மூலம் இந்த ஏரி உருவாக்கப்பட்டது. இந்த ஏரி உலு பேராக் மாவட்டத்தின் தலைநகரான கிரிக் நகரில் இருந்து ஏறக்குறைய 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இந்த ஏரி உலு பேராக் மாவட்டத்தின் தலைநகரான கிரிக் நகரில் இருந்து ஏறக்குறைய 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
செயற்கையாக உருவாக்கப்பட்ட பன்டிங் தீவு; மற்றும் தெமங்கோர் ஏரிப் பாலம் (Lake Temenggor Bridge) ஆகியவை இந்த ஏரியில்தான் உள்ளன. கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை (East–West Highway) (Malaysia) இந்த ஏரிக்கு அப்பால் கடந்து செல்கிறது.
இந்த அணையின் மூலமாக அங்கு ஒரு புனல் மின் நிலையம் உருவாக்கப்பட்டு உள்ளது. 87 மெகாவாட் திறன் கொண்ட 4 இத்தாச்சி விசையாழிகள் (Hitachi Turbines) மூலமாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது. சராசரியாக ஓர் ஆண்டிற்கு 900 மில்லியன் யூனிட் மின்னாற்றல் உற்பத்தியாகிறது. இந்த நிலையம் தெனாகா நேசனல் (Tenaga Nasional) மூலமாக இயக்கப்படுகிறது.
சனவரி 1974-இல் கட்டுமானம் தொடங்கப்பட்டு 1978-ஆம் ஆண்டின் மத்தியில் நிறைவடைந்தது. முதல் மின் பகிர்மானம் அக்டோபர் 1, 1977-இல் தொடங்கப்பட்டது.
அணையின் கூறுகள் பின்வருமாறு:[2]
தெமெங்கோர் அணை தற்போது மலேசியாவின் மூன்றாவது பெரிய அணையாகும். இந்த அணை 1979-இல் கட்டி முடிக்கப்பட்டவுடன் மிகப்பெரிய அணையாகவும்; மிகப்பெரிய நீர்மின் உற்பத்தி நிலையமாகவும் இருந்தது. அந்தச் சாதனையை 1985-இல் கென்யிர் அணை முறியடித்தது.
இந்த அணை பேராக் ஆற்றில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கிறது. அத்துடன் தாய்லாந்தில் உள்ள பெத்தோங் பகுதியில் இருந்து மலாயா பொதுவுடைமை கட்சியின் ஆதரவாளர்கள் மலேசியாவிற்குள் ஊடுருவதையும் தடுத்தது. அந்த வகையில் அதன் பங்கிற்காக மலேசிய வரலாற்றில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.