தெமங்கோர் ஏரி | |
---|---|
Temenggor Lake Tasik Temenggor | |
![]() அழகிய தெமங்கோர் ஏரி | |
அமைவிடம் | உலு பேராக் மாவட்டம், பேராக், தீபகற்ப மலேசியா![]() |
ஆள்கூறுகள் | 5°32′38″N 101°19′59″E / 5.543995°N 101.333191°E |
வகை | பல்நோக்கு நீர்த்தேக்கம் |
முதன்மை வரத்து | பேராக் ஆறு |
முதன்மை வெளியேற்றம் | பேராக் ஆறு |
வடிநில நாடுகள் | மலேசியா |
மேற்பரப்பளவு | 15 km2 (5.8 sq mi) |
Islands | பன்டிங் தீவு (Banding Island) |
தெமங்கோர் ஏரி (மலாய்: Tasik Temenggor; ஆங்கிலம்: Temenggor Lake); என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், உலு பேராக் மாவட்டத்தில் (Hulu Perak District) அமைந்துள்ள ஓர் ஏரியாகும்.
தீபகற்ப மலேசியா, திராங்கானு, உலு திராங்கானு மாவட்டத்தில் உள்ள கென்யிர் ஏரிக்கு அடுத்த நிலையில் இது இரண்டாவது பெரிய ஏரியாகும். இந்தச் செயற்கை ஏரி 1,533 மீ உயரமுள்ள உலு தித்தி பாசா மலைக்குத் (Ulu Titi Basah) தெற்கே அமைந்துள்ளது.[1]
மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக தெமங்கோர் அணை (Temenggor Dam) கட்டப்பட்டதன் மூலம் இந்த ஏரி உருவாக்கப்பட்டது. இந்த ஏரி உலு பேராக் மாவட்டத்தின் தலைநகரான கிரிக் நகரில் இருந்து ஏறக்குறைய 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
செயற்கையாக உருவாக்கப்பட்ட பன்டிங் தீவு; மற்றும் தெமங்கோர் ஏரிப் பாலம் (Lake Temenggor Bridge) ஆகியவை இந்த ஏரியில்தான் உள்ளன. கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை (East–West Highway) (Malaysia) இந்த ஏரிக்கு அப்பால் கடந்து செல்கிறது.
பேராக் மாநிலத்தின் மீன்வளத் துறை, தெமங்கோர் ஏரி மேலாண்மைத் திட்டத்தைச் (Temenggor Lake Management Plan) செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. தெமங்கோர் ஏரிப் பகுதி மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு மண்டலம், பொழுதுபோக்கு மீன்பிடி மண்டலம் மற்றும் வணிக மண்டலம் என பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தெமங்கோர் ஏரிப் பாதுகாப்பு மண்டலம் என்பது தெமங்கோர் ஏரியின் வடக்குப் பகுதியில் உள்ள கெஜார் ஆறு, சுங்கை தியாங் ஆறு; மற்றும் காடோங் ஆறு ஆகிய மூன்று ஆறுகளையும் உள்ளடக்கியது.
நன்னீர் மீன் இனப்பெருக்கம் செய்யும் ஒரு சிறப்பிடமாக தெமெங்கோர் ஏரி உருவாக்கப்பட்டது. நச்சுக் கழிவுகள், மீன்கள் கடத்தல், இரசாயனங்களைப் பயன்படுத்துதல், மீன்களைப் பிடிக்க வெடிகுண்டுகளைப் பயன்படுத்துதல், மின்சாரத்தைப் பயன்படுத்துதல்; போன்றவற்றால் ஆற்று மீன்கள் அழிந்து வருகின்றன.
1997-ஆம் ஆண்டு முதல், பேராக் மாநிலத்தின் மீன்வளத் துறை, நன்னீர் மீன் குன்சுகளை வழங்கி வருகிறது.
கெலா மீன், தெமோலே மீன், பாங் மீன், கெலாவ் மீன், தெங்காஸ் மீன், லோமா மீன், தெங்கலான் மீன், செபராவ் மீன், லம்பம் மீன் போன்ற உயர்விலையுள்ள மீன்களை இங்கு காணலாம். மலேசியா-நார்வே கூட்டு நிறுவனமான திராபியா மலேசியா நிறுவனம் (Malaysia-Norway Joint Venture), திலாப்பியா மீன் வளர்ப்பை வணிக அடிப்படையில் நடத்துகிறது.[2]